செய்திகள் :

IND vs ZIM : “தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்-ஐ பாத்தீங்களா?” – ஹர்திக் பாண்ட்யா பதில்

post image

சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதில் முக்கிய பங்களிப்பாக 50 (23) ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா.

பின்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றது குறித்து அவர் கூறுகையில், ``மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால், 23 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பது சற்று வித்தியாசமாகவே தோன்றும். ஆனால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது என்று நினைக்கிறேன்.

Hardik Pandya

நான் அதிகமாக பலத்துடன் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன் என்று உணர்ந்தேன். அதற்குப் பிறகு ஆட்டத்தின் போக்கில், பந்தை சரியான நேரத்தில் அடித்து சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று உணர்ந்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில், இது ஒரு நல்ல போட்டி. ஏனெனில் என் ரிதத்தை தொடர்ந்து வைத்திருக்க இது உதவியது. கடந்த சில போட்டிகளில் நான் நினைத்தபடி விளையாட முடியாமல் போனது. அதனால் இப்போது மிகவும் திருப்தியாக இருக்கிறேன்." என்றார்

முன்னதாக நடந்த தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை பார்த்தீர்களா என்று கேட்டபோது, 'ஆமாம், அந்த போட்டியை நாங்கள் எல்லோரும் கவனித்துக்கொண்டே இருந்தோம். இப்போது முக்கியமானது நல்ல கிரிக்கெட் விளையாடுவது. நிச்சயமாக அந்த போட்டியை கவனித்தோம். ஆனால் அதே நேரத்தில், எங்கள் போட்டி முடிந்தவுடன், இது எங்களுடைய ஆட்டம் என்று முழுக் கவனமும் போட்டியில் செலுத்தினோம்." என்றார்

Hardik Pandya

அவரின் பந்துவீச்சு குறித்து கூறுகையில், 'புதிய பந்துடன் பந்துவீசுவது எனக்கு பிடிக்கும். பந்து ஸ்விங் ஆகிறது. கடவுள் அருள் செய்துள்ளார். இன்ஸ்விங், அவுட்ஸ்விங் – இரண்டையும் வீசும் திறன் எனக்கு உள்ளது. அதனால் எனக்கு இது மிகவும் பிடிக்கும். இதனால் விக்கெட்டுகளை எடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும் இருக்கிறது. ஆகவே, மிகவும் திருப்தி" என்றார்.

Rinku Singh: 'ஏழ்மையை வென்று மகனை கிரிக்கெட்டராக்கிய தந்தை' - ரிங்குவின் தந்தை புற்றுநோயால் மரணம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். இவரின் தந்தை கான்சந்த் சிங் LPG சிலிண்டர் டெலிவரி செய்தவர். கடின உழைப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து உயர்ந்த ரிங்கு சிங், 20... மேலும் பார்க்க

SL vs NZ: "எதிர்மறையான சூழலை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்"- கேப்டன் தசுன் ஷனகா வேண்டுகோள்

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று ( பிப். 25) இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இலங்கை அணி அரையிறு... மேலும் பார்க்க

WI vs ZIM : வெஸ்ட் இண்டீஸின் மெகா வெற்றி, ஜிம்பாப்வேக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் சிக்கல்தான்!

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டி, இது ஜிம்பாப்வே அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தலைவலியை உருவாக்கிய ஒரு போட்டி எனலாம்.சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலா... மேலும் பார்க்க

IND vs SA : ``அவர் உண்மையான ‘டீம் மேன்’; எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்!" - கேப்டன் மார்க்ரம்

T20 தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்தியாவை சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்கா.இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்ட... மேலும் பார்க்க

முன்னாள் மனைவிக்கு 4 கோடி ரூபாய் காரை பரிசளித்த ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை: மைதானம் இல்ல; போதிய வசதிகள் இல்ல, ஆனாலும்!- ஃபைனலில் J&K அணி; இலக்கை அடைந்தது எப்படி?

​“நாங்க சும்மா விளையாட வரல... ஜெயிக்க வந்திருக்கோம்!” - 70 ஆண்டுக்கால ஏமாற்றத்தை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திரு... மேலும் பார்க்க