செய்திகள் :

Iran: "இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்" - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்

post image

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது.

இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, 'கச்சா எண்ணெய் விலை'.

இந்த விலை உயர்வு சாமானியர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதனால், அனைத்து மக்களுக்குமே இந்தப் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஈரான் மீதான போர்
ஈரான் மீதான போர்

எப்போது போர் முடிவுக்கு வரும்?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தனது ட்ரூத் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வீடியோவில் அவர்,

"நம்முடைய முழுக் கொள்கைகளும் நிறைவேறும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் முழு வலுவுடன் தொடரும்" என்றும், ''ஈரான் மீதான போர் சரியான நடவடிக்கை'' என்றும் பேசியிருக்கிறார்.

நீண்ட தூரக் குறிகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருந்த ஈரானிய ஆட்சி அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதனால்தான், இந்தப் போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்று ட்ரம்ப் வீடியோவில் கூறியிருக்கிறார்.

மேலும், இந்தப் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்துள்ளதாகவும், இன்னும் இறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

`உதயசூரியன் சின்னத்துக்கு ஓகே சொன்ன கமல்!' - மநீம, திமுக டீல் என்ன?

தி.மு.க கூட்டணிக்குள் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. இதற்கிடையில் 'உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்' என்ற தி.மு.க-வின் கண்டிஷனுக்கு ம.நீ.ம க்ரீன்... மேலும் பார்க்க

Modi: "திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது!" - மதுரையில் மோடி!

மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வருகைத் தந்துள்ளார். மதுரைக்கு வந்தவர் திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்

ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நி... மேலும் பார்க்க

Ali Khamenei: "பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன" - ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டத... மேலும் பார்க்க

அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தினர் அறிவாலயம் பக்கமே வராதாதது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க - ம.நீ.... மேலும் பார்க்க

தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அறிவாலயம். இச்சூழலில் வி.சி.க-வின் எதிர்பார்ப்புக... மேலும் பார்க்க