செய்திகள் :

"Iran போரை நீட்டிக்க அமெரிக்க மக்களிடம் 'இதை' செய்கிறது இஸ்ரேல்"- அமெரிக்க துணை அதிபர் குற்றச்சாட்டு

post image

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின், மீண்டும் ஈரான் போர் தொடங்கியதற்கு மிக முக்கிய காரணம் - இஸ்ரேல்.

இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியதால்தான், ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது.... அதன் வழியாகப் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இது உலக நாடுகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், ஈரானின் இந்தத் தாக்குதலைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் தொடங்கியது. இப்படி ஈரான் போரின் முற்றுப்புள்ளி காற்புள்ளியாக மாறியது.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
இப்படியான சூழலில், பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இஸ்ரேல் குறித்து பேசியுள்ளார்...

"இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சிலர், தங்களது தற்போதைய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்பதற்காகவே, எங்களை இந்த அமைதிக் கொள்கையிலிருந்து திசைதிருப்ப தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்தப் போரை எவ்வித காலவரையுமின்றித் தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காக, அமெரிக்கப் பொதுமக்களின் கருத்தை மாற்றியமைக்கவும், அதில் முறைகேடுகள் செய்யவும் அவர்களின் நிர்வாகத்திற்குள் சிலர் முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

மீண்டும் சொல்கிறேன், இது எந்தவொரு குறிப்பிட்ட இலக்கையும் நோக்கியது அல்ல, வெறுமனே போரைக் காலவரையுமின்றி நீட்டிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே செய்யப்படுகிறது."

"என் ​உடலை ஜூம் செய்து போட்டோ எடுத்து வலைதளத்தில் பகிர்ந்தனர்"- கேரள பெண் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

கேரள மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா டெல்லியில் நடைபெற்ற கேரள பத்திரிகையாளர் சங்கத்தின் 'மைக் டுகெதர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அமைச்சர் பிந்து கிருஷ்ணா ... மேலும் பார்க்க

பழனி கோயில் நில முறைகேடு: "ஊழலுக்குப் பின்னாலுள்ள அந்த Powercenter யார்?" - முதல்வருக்கு EPS கேள்வி

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது..."பழனி அருள்... மேலும் பார்க்க

சபரி வர்மன் லாக்கப் கொலை: "சிலரைக் காப்பாற்றுவதற்காக கைதிகள் மீது வழக்கு" - கனிமொழி குற்றச்சாட்டு

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வியாபாரி சபரி வர்மன் சிறை காவலர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ம் தேதி மரணமடைந்த அவரது உடலை இதுவரை க... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட்; சூடு பிடிக்கும் பழனி கோவில் நில விவகாரம்

​திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமாக, பழனி அடிவாரத்தில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது.இந்த நிலத்தை எவருக்கும் விற்பனை செய்யவ... மேலும் பார்க்க

வடபழஞ்சி: `ஓர் உயிரிழப்புக்குப் பிறகும் தொடரும் பாதுகாப்பு குறைபாடு' - ரயில்வே கேட் அமைக்கப்படுமா?

மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதையில் அமைந்துள்ள வடபழஞ்சி ரயில்வே நிலையம், சிறிய நிலையமாக இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகிறது. பள்ளி, கல்லூரி மாண... மேலும் பார்க்க