செய்திகள் :

சபரி வர்மன் லாக்கப் கொலை: "சிலரைக் காப்பாற்றுவதற்காக கைதிகள் மீது வழக்கு" - கனிமொழி குற்றச்சாட்டு

post image

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வியாபாரி சபரி வர்மன் சிறை காவலர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13-ம் தேதி மரணமடைந்த அவரது உடலை இதுவரை குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீட்டுக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தி.மு.க எம்.பி கனிமொழி‌.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  "சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மனை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு அனுப்பிய அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குடும்பத்தினர் சிறையில் சென்று சந்தித்தபோது, அவர் உடல்நலத்தோடு இருந்துள்ளார். அதன்பிறகு திடீரென்று அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் தரப்பட்டுள்ளது.

அதன்படி குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சபரி வர்மன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் அரசியல் கட்சிகள் மற்றும் குடும்பத்தார் போராடிய பிறகுதான் அரசு நடவடிக்கையே எடுக்கத் தொடங்கியுள்ளது.

எனவே இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரும்போதே இறந்துவிட்ட ஒருவருக்கு யாரையுமே கேட்காமல் எப்படி பிரேதப் பரிசோதனை செய்தார்கள்? மேலும் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.

சபரி வர்மன் உடலை வாங்கும்படி அவரது தந்தையிடம் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் இதுவரை முன்வரவில்லை. அரசின் சார்பில் கூட யாரேனும் ஆறுதல் கூறவில்லை.

சிறையில் கொல்லப்பட்ட சபரி வர்மன்
சிறையில் கொல்லப்பட்ட சபரி வர்மன்

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எந்த நிவாரணமும் இதுவரைக்கும் அறிவிக்கப்படவில்லை. அவருடைய மனைவிக்கு அரசு வேலை தருவதாக அரசு வாய் திறந்து இதுவரை கூறவில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், 'அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று குடும்பத்தினர் கூறியதோடு, 'இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்' என்று சபரி வர்மனின் மனைவி மற்றும் சகோதரி கூறியுள்ளனர். 

எனவே நடந்த சம்பவத்துக்கு முதலில் அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசைத்தாண்டி ஒரு தவறு நடந்துள்ளது. இதற்கு முன்பு இதுபோல நடந்தபோது அரசு பொறுப்பேற்றது. ஆனால், இந்த அரசு யார் மீதாவது பழி போடுவதற்குத்தான் பார்க்கிறார்களே தவிர எதற்கும் பொறுப்பேற்க தயாராக இல்லை.

சபரிவர்மன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தி.மு.க எம்.பி கனிமிழி
சபரிவர்மன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தி.மு.க எம்.பி கனிமிழி

அதுமட்டுமில்லாமல் தற்போது சிறையில்கூட இருந்த கைதிகள் மீதும் வழக்கு போடப்பட்டிருக்கிறது. கைதிகள் மீது வழக்கு போட்டு வழக்கை திசை திருப்புவதற்குப் பார்ப்பதாக குடும்பத்தினர் உறுதியாக நம்புகிறார்கள். வழக்கைத் திசை திருப்புவதற்காகவும், சிலரைக் காப்பாற்றுவதற்காகவும் கைதிகள் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.

இப்படி சிக்கல்கள், மறைக்கக்கூடிய சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு சூழலைத்தான் நாம் இங்கே பார்க்க முடிகிறது. அதோடு எப்போது இறந்தார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. அது என்ன மாதிரி அறிக்கை என்று தெரியவில்லை.

காயங்களால் அவர் உயிர் இழக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் அவர் உயிர் இழப்பிற்கு காரணம் என்ன? அதை தெளிவாகக் கூற வேண்டும். சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஏன் தரவில்லை? 

பிரேதப் பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளை ஏன் கொடுக்கவில்லை? எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் தி.மு.க வலியுறுத்துகிறது" என்றார்.

பழனி கோயில் நில முறைகேடு: "ஊழலுக்குப் பின்னாலுள்ள அந்த Powercenter யார்?" - முதல்வருக்கு EPS கேள்வி

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது..."பழனி அருள்... மேலும் பார்க்க

"Iran போரை நீட்டிக்க அமெரிக்க மக்களிடம் 'இதை' செய்கிறது இஸ்ரேல்"- அமெரிக்க துணை அதிபர் குற்றச்சாட்டு

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின், மீண்டும் ஈரான் போர் தொடங்கியதற்கு மிக முக்கிய காரணம் - இஸ்ரேல். இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியதால்தான், ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது.... அதன்... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட்; சூடு பிடிக்கும் பழனி கோவில் நில விவகாரம்

​திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமாக, பழனி அடிவாரத்தில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது.இந்த நிலத்தை எவருக்கும் விற்பனை செய்யவ... மேலும் பார்க்க

வடபழஞ்சி: `ஓர் உயிரிழப்புக்குப் பிறகும் தொடரும் பாதுகாப்பு குறைபாடு' - ரயில்வே கேட் அமைக்கப்படுமா?

மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதையில் அமைந்துள்ள வடபழஞ்சி ரயில்வே நிலையம், சிறிய நிலையமாக இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகிறது. பள்ளி, கல்லூரி மாண... மேலும் பார்க்க

"அரசு விழாக்களில் வந்தே மாதரத்தை திணிப்பது தேவையற்ற சிக்கல்" - சீமான் எதிர்ப்பு

வந்தே மாதரம் பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."மதச்சார்பின்மைக... மேலும் பார்க்க