செய்திகள் :

பழனி கோயில் நில முறைகேடு: "ஊழலுக்குப் பின்னாலுள்ள அந்த Powercenter யார்?" - முதல்வருக்கு EPS கேள்வி

post image

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது...

"பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோயில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்குத் தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்தப் பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.

தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!

பழனி
பழனி

இந்தப் பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?

இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது.

இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு பவர் சென்டர் தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளைக் கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே பவர்சென்டர் என்று சொன்ன முதலமைச்சர் அவர்களே, இந்த ஊழலில் பின்னால் யார் அந்த பவர்சென்டர்?

அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனைப் பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்தப் பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்தப் பத்திரப் பதிவிற்காகத்தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த பவர்சென்டர்?

இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது என்பது, இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.

நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோயில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்".

"என் ​உடலை ஜூம் செய்து போட்டோ எடுத்து வலைதளத்தில் பகிர்ந்தனர்"- கேரள பெண் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

கேரள மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா டெல்லியில் நடைபெற்ற கேரள பத்திரிகையாளர் சங்கத்தின் 'மைக் டுகெதர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அமைச்சர் பிந்து கிருஷ்ணா ... மேலும் பார்க்க

"Iran போரை நீட்டிக்க அமெரிக்க மக்களிடம் 'இதை' செய்கிறது இஸ்ரேல்"- அமெரிக்க துணை அதிபர் குற்றச்சாட்டு

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின், மீண்டும் ஈரான் போர் தொடங்கியதற்கு மிக முக்கிய காரணம் - இஸ்ரேல். இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியதால்தான், ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது.... அதன்... மேலும் பார்க்க

சபரி வர்மன் லாக்கப் கொலை: "சிலரைக் காப்பாற்றுவதற்காக கைதிகள் மீது வழக்கு" - கனிமொழி குற்றச்சாட்டு

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வியாபாரி சபரி வர்மன் சிறை காவலர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ம் தேதி மரணமடைந்த அவரது உடலை இதுவரை க... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட்; சூடு பிடிக்கும் பழனி கோவில் நில விவகாரம்

​திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமாக, பழனி அடிவாரத்தில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது.இந்த நிலத்தை எவருக்கும் விற்பனை செய்யவ... மேலும் பார்க்க

வடபழஞ்சி: `ஓர் உயிரிழப்புக்குப் பிறகும் தொடரும் பாதுகாப்பு குறைபாடு' - ரயில்வே கேட் அமைக்கப்படுமா?

மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதையில் அமைந்துள்ள வடபழஞ்சி ரயில்வே நிலையம், சிறிய நிலையமாக இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகிறது. பள்ளி, கல்லூரி மாண... மேலும் பார்க்க