செய்திகள் :

"நான் எந்தக் குற்றமும் செய்யாதவன்; நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து நிற்கிறேன்" - எ.வ.வேலு பேச்சு

post image

சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இந்தப் புகார் விசாரணைக்காக சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக்கத்தில் நேரில் ஆஜரானார் எ.வ.வேலு.

விசாரணைக்குப் பிறகு பத்திரிகையாளரிடம் பேசியவர், "இன்று சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. அந்த அடிப்படையில், காவல்துறை உதவி சூப்பரண்ட் அவர்கள் இன்று விசாரணைக்கு வர வேண்டும் என்று எனக்குக் கடிதம் கொடுத்தார்கள்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

அதனால், இன்று காலை விசாரணைக்கு வந்தேன். என்னை பொறுத்தவரை முழுமையாக ஒத்துழைக்கின்ற அடிப்படையில், என் மனதிற்குப் பட்ட உண்மைகளை அவர்களுக்குப் பதிலாக அளித்திருக்கிறேன்.

என்னுடைய பதில் என்பது 100 சதவீதம் உண்மையை உள்ளடக்கியது. அதில் எந்தவிதமான கலப்படமும் இல்லை. அந்த அடிப்படையில் அந்தப் பணியை நான் நிறைவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறேன். நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று எனது பதிலைச் சொல்லியிருக்கிறேன்.

`மீண்டும் எப்பொழுது இது சம்பந்தமாக என்னை அழைத்தாலும் நான் முழு ஒத்துழைப்பு தருவேன்; மீண்டும் கூப்பிட்டால் நான் வருவேன்' என்று அதிகாரியிடம் கூறிவிட்டு வந்திருக்கிறேன்.

'மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை' என்றொரு பழமொழி உண்டு. நான் எந்தவிதமான குற்றமும் செய்யாதவன். அரசாங்கம் திட்டமிட்டு என்னை இதில் இணைத்திருக்கிறார்கள். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற காரணத்தினால், இதற்கு மேல் விரிவாக எதையும் நான் சொல்ல முடியாது.

வருகின்ற 28-ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. நீதிமன்றத்தில் நான் நீதியை எதிர்பார்த்து நிற்கிறேன். காவல்துறைப் பொறுத்தவரை நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். மீண்டும் அழைத்தால் நான் வருவேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்" என்று கூறினார்.

வடபழஞ்சி: `ஓர் உயிரிழப்புக்குப் பிறகும் தொடரும் பாதுகாப்பு குறைபாடு' - ரயில்வே கேட் அமைக்கப்படுமா?

மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதையில் அமைந்துள்ள வடபழஞ்சி ரயில்வே நிலையம், சிறிய நிலையமாக இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகிறது. பள்ளி, கல்லூரி மாண... மேலும் பார்க்க

"அரசு விழாக்களில் வந்தே மாதரத்தை திணிப்பது தேவையற்ற சிக்கல்" - சீமான் எதிர்ப்பு

வந்தே மாதரம் பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."மதச்சார்பின்மைக... மேலும் பார்க்க

`இன்னும் 2 நாள்களில் இறந்துவிடலாம்' - சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டம்; செவிமடுக்காத அரசு!

இன்று 18-வது நாள்!புது டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி 18 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இது குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை பேச்சு, மூச்சு இல்லை. ந... மேலும் பார்க்க

கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி? - விருப்பப்பட்டு வழங்கும் முதல்வர் விஜய்?

தவெகவின் கரூர் மத்திய மாவட்டச் செயலாளரான மதியழகனுக்கு முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவி கொடுக்கப்படவிருக்கிறதாம். முதல்வர் விஜய்யே தனிப்பட்ட முறையில் விருப்பப்பட்டு மதியழகனின் பெயரை டிக் அடித்திர... மேலும் பார்க்க

பழனி முருகன் கோயில் நில மோசடி; பத்திரப்பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தின் ஆவ... மேலும் பார்க்க