"நான் எந்தக் குற்றமும் செய்யாதவன்; நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து நிற்கிறேன...
The Odyssey: " 'தி ஒடிஸி' ஓர் அழுத்தமான காதல் கதை!" - கிறிஸ்டோபர் நோலன்
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தி ஒடிஸி' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் பிரத்யேகமாகப் படம்பிடிக்கப்பட்ட இந்தச் சினிமா மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகிறது.

இப்படத்தின் பிரீமியர் காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் திரையிடப்பட்டிருந்தது. அதற்காக இந்தியா வந்திருந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ஊடகங்களைச் சந்தித்துப் பேட்டியளித்திருக்கிறார்.
அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர், " 'தி ஒடிஸி' என்பது சாகசப் பயணம். இவ்வளவு பெரிய பிரமாண்டமான கதையைத் திரையில் கொண்டுவரும்போது, ரசிகர்களை ஒரு த்ரில்லான சவாரிக்கு அழைத்துச் செல்லவே நாம் விரும்புவோம். ஆனால், அடிப்படையில் இது ஓர் அழுத்தமான காதல் கதை. இந்த பிரமாண்டமான சாகசங்களுக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பின்னால் இருக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்கள் தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான், அந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான மதிப்பு இன்னும் கூடும்.

ஆறு நாடுகளில், 90 நாள்களாக, சுமார் 20 லட்சம் அடி நீளமுள்ள ஐமேக்ஸ் (IMAX) ஃபிலிம் ரோல்களைப் பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். படப்பிடிப்பில் ஒவ்வொரு ஷாட்டையும் துண்டு துண்டாகத்தான் எடுப்போம். படம் சிறியதோ பெரியதோ, எந்த அளவிலான திரைப்படமாக இருந்தாலும் சரி, அதன் படப்பிடிப்பின்போது நம்மை நிலைகுலையச் செய்யும் அளவுக்குச் சவாலான, அழுத்தமான தருணங்கள் வரத்தான் செய்யும். அது எல்லா படங்களுக்கும் பொதுவான ஒன்றுதான்" எனப் பேசியிருக்கிறார்.














