செய்திகள் :

Iran: `போர் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்' - அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!

post image

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது அமெரிக்காவிலும் எதிரொலித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றும், போர் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அவர் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''ஈரானுக்கு எதிரான போர் குறுகிய காலமாக இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய குடியரசு ஒரு புதிய கடுமையான உச்ச தலைவரைத் தேர்ந்தெடுத்ததால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தடைபட்டால் சண்டை அதிகரிக்கும் சாத்தியம் இருக்கிறது.

குறுகிய கால சுற்றுலா

சில தீமைகளிலிருந்து விடுபட மத்திய கிழக்குக்கு ஒரு சிறிய சுற்றுலா சென்றோம். இது ஒரு குறுகிய கால சுற்றுலாவாக இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஈரானில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, ஈரான் பதிலளித்துள்ளது. ``அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் எப்போது நிறுத்தப்படும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்" என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

நாங்கள் தான் முடிவு செய்வோம்

இது குறித்து இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இப்பிராந்தியத்தின் எதிர்காலம் இப்போது எங்கள் கைகளில் உள்ளன. போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம். போரை அமெரிக்க படைகள் முடிவுக்கு கொண்டு வராது" என்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த சில மணி நேரத்தில் அமெரிக்கத் தளபதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், "ஹார்முஸ் ஜலசந்திக்குள் எண்ணெய் ஓட்டத்தை தடுக்கும் வகையில் ஈரான் ஏதாவது செய்தால், அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதை விட இருபது மடங்கு அதிகமாக அமெரிக்காவால் தாக்கப்படுவர். கூடுதலாக, எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை நாங்கள் தாக்குவோம். இதனால் ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவது சாத்தியமற்றதாகிவிடும். மரணம், நெருப்பு மற்றும் சீற்றம் அவர்கள் மீது ஆட்சி செய்யும்.

ஆனால் அது நடக்கக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக பிரார்த்திக்கிறோம். இது சீனாவிற்கும், ஹார்முஸ் ஜலசந்தியை அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவிலிருந்து ஒரு பரிசு" என்று அவர் அதில் கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது போரை முடிவுக்கு கொண்டு வர புடின் சில ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதேசமயம் போர் தொடருமானால் வளைகுடா பிராந்தியத்தில் இருந்து ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் ஹார்மோஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கான உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக ஏற்கெனவே அப்பகுதியில் ஆயிரக்கணக்கான வணிகக் கப்பல் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. அதிகமான கப்பல்கள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி: `கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்தே ரன் அடிப்பது முக்கியம்தான்; ஆனால்..!' - ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (09-03-2026) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’ கழகத்த... மேலும் பார்க்க

"பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு"- பா.ரஞ்சித் காட்டம்

மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இந்தச் சம்பவம் தொடர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஹோட்டல்னு நினைச்சி தூங்கிட்டோம்'- ஆளுநரை அலற வைத்த போதை இளைஞர்; பதறிய போலீஸ்!

புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனால், கடற்கரை சாலையில் கலாசார மையத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தை த... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு; ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமையல் எரிவாய... மேலும் பார்க்க

திமுக கூட்டணி: `அரசியல்ல சங்கடங்கள் சாதாரணம்' பாஸ்! - வடிவேலு முதல் கமல், ஓ.பி.எஸ் வரை!

'மேனேஜர் கூட செட் ஆகலைனு கம்பெனி மாறினா, கடைசியில் நாம சேர்ந்த புது கம்பெனிக்கே அந்த மேனேஜரும் வந்துட்டாரு'- ஸ்டான்ட் அப் காமெடி ஏரியா ஒன்றில் தென்பட்ட ஒரு கமென்ட் இது. இன்றைய அரசியல் சூழலுக்கு ரொம்பவ... மேலும் பார்க்க

'25 நாள்கள் முன்பு சிலிண்டர் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை!' நெருக்குகிறதா தட்டுப்பாடு?

ஈரான் போரினால் உலகம் முழுவதும் எரிசக்திகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், எரிசக்திகளை இறக்குமதி செய்யும் இந்தியாவின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம். இனி வரும் சூழலைச் சமாளிக்க மத்... மேலும் பார்க்க