செய்திகள் :

Jana Nayagan: "அப்படி அமைந்தால் மீண்டும் ஒரு ரீமேக் படம் செய்வேன்!" - அ. வினோத்

post image

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்காக அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Jana Nayagan - Stills - Vijay
Jana Nayagan - Stills - Vijay

படத்தின் ரிலீஸுக்குப் பிறகு NDTV ஊடகத்திற்கு இயக்குநர் அ.வினோத் பேட்டியளித்திருக்கிறார்.

பெரிய திரைப்படங்களின் வசூல் குறித்து அந்த நேர்காணலில் பேசியவர், "சினிமா வரலாற்றில் எந்தக் காலக்கட்டத்தை எடுத்துக்கொண்டாலும், 10 சதவிகித படங்கள் மட்டுமே வெற்றி பெறும்.

எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி விகிதம் என்பது 10 முதல் 20 சதவிகிதம் மட்டும்தான். சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து இயக்குநர்களின் எண்ணமும் நேர்மையானதுதான்.

H Vinoth Interview - Jana Nayagan
H Vinoth Interview - Jana Nayagan

ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தோடுதான் அனைவரும் உழைக்கிறார்கள். சில நேரங்களில் அது வெற்றி பெறுகிறது, சில நேரங்களில் கைக்கொடுப்பதில்லை.

வசூலை மட்டுமே ஒரு படத்தின் தரத்திற்கான அளவுகோலாக நாம் பார்க்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்." என்று பேசியிருக்கிறார்.

சிறிய பட்ஜெட் படங்களை மீண்டும் இயக்குவாரா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தந்தவர், "அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பெரிய பட்ஜெட் படங்கள் அமைகிறதா என்று பார்ப்பேன்.

அப்படி அமையாவிட்டால் சிறிய பட்ஜெட் படம் பண்ணுவேன், அவ்வளவுதான். நல்ல கதை அமைந்தால் மீண்டும் ஒரு ரீமேக் படம் செய்வேன்." என்கிறார்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க