நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
Jana Nayagan: 'அழியாதது இந்த வாளின் கதையே' - வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்!
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.
அ. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு நிலவி வருகிறது.
இப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஒரு பேரே வரலாறு' என்கிற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது.
தளபதி கச்சேரி பாடலை விஜய்யும், ராப் பாடகர் அறிவும் இணைந்து பாடியிருந்தார்கள்.
இப்பாடலை பின்னணி பாடகர் விஷால் மிஸ்ராவும், அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியிருக்கிறார்.

இப்பாடலில், 'மக்கள் நினைக்காமல் ஒரு மாற்றம் பிறக்காது', 'அழியாதது இந்த வாளின் கதையே', 'களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே!' உள்ளிட்ட சில வரிகள் விஜய்யின் அரசியல் பயணத்தோடு இணைத்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.



















