செய்திகள் :

Junior Hockey WC: ஹாக்கி உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்திய அணி அபாரம்; பந்தாடப்பட்ட சிலி அணி!

post image

ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை நேற்று தமிழகத்தில் தொடங்கியது.

நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரையில் நடைபெறும் இத்தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்றிருக்கின்றன. அவை 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டி என மொத்தம் 3 லீக் போட்டிகளில் ஆடும்.

இந்தியா vs சிலி - ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை
இந்தியா vs சிலி - ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

குரூப் A - கனடா, ஜெர்மனி, அயர்லாந்து, தென்னாப்பிரிக்க

குரூப் B - சிலி, இந்தியா, ஓமன், ஸ்விட்சர்லாந்து

குரூப் C - அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, ஜப்பான்

குரூப் D - பெல்ஜியம், எகிப்து, ஸ்பெயின், நமீபியா

குரூப் E - ஆஸ்திரியா, இங்கிலாந்து, மலேசியா, நெதர்லாந்து

குருப் F - ஆஸ்திரேலியா, வங்காளதேசம், கொரியா, பிரான்ஸ்

அனைத்து போட்டிகளும் மதுரை சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் மற்றும் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியம் ஆகிய இரண்டு மைதானங்களில் நடைபெறும்.

முதல் நாளான நேற்று மதுரையில் நடைபெற்ற தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 4 - 0 என தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் கனடாவை 3 - 4 என அயர்லாந்தும், ஜப்பானை 1 - 4 என அர்ஜென்டினாவும், எகிப்தை 0 - 8 என ஸ்பெயினும், சீனாவை 3 - 5 என நியூசிலாந்தும், நமீபியாவை 1 - 12 என பெல்ஜியமும், ஸ்விட்சர்லாந்தை 0 - 4 என ஓமனும் வீழ்த்தின.

இந்தியா vs சிலி - ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை
இந்தியா vs சிலி - ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

நேற்று கடைசிப் போட்டியாக சென்னையில் இந்திய அணியும் சிலி அணியும் மோதின.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் 7 - 0 என மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தனர்.

இந்திய அணியில் ரோஷன் குஜுர், தில்ராஜ் சிங் ஆகியோர் தலா 2 கோல்களும், அஜீத் யாதவ், அனுமோல் எக்கா, கேப்டன் ரோஹித் ஆகியோர் தலா ஒரு கோலும் போட்டனர்.

இந்தியா vs சிலி - ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை
இந்தியா vs சிலி - ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

இந்திய அணி இன்னும் தனக்கிருக்கும் இரண்டு லீக் போட்டிகளில் இன்று ஓமன் அணியையும், டிசம்பர் 2-ம் தேதி ஸ்விட்சர்லாந்து அணியையும் எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்திய அணி 2001 மற்றும் 2016 என இரண்டு முறை ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hockey Men's Junior WC: இறுதிப்போட்டி கனவை இழந்த இந்தியா; அரையிறுதியில் ஜெர்மனியிடம் படுதோல்வி

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் இன்று (டிசம்பர் 7) நடைபெற்றது.முன்னதாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளில், ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் ... மேலும் பார்க்க

Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா!

தமிழ்நாட்டில் நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரானது காலிறுதிச் சுற்றை எட்டியிருக்கிறது.லீக் சுற்று போட்டிகள் முடிவில் 6 குழுக்களில் முதலிடம் பிடித்த 6 அணிகள் மற்றும் இரண்ட... மேலும் பார்க்க

Hockey Men's Junior WC: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா; மற்ற 7 அணிகள் எவை?

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நவம்பர் 28-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்றுள்ள 24 அணிகள் மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.இதி... மேலும் பார்க்க

Hockey Men's Junior WC 2025: ஓமன் அணியை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்; 17 - 0 என அபரா வெற்றி!

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நேற்று (நவம்பர் 28) முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.டிசம்பர் 10 வரை இத்தொடரில் அனைத்து போட்டிகளும் மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும்.24 அணிகள் விளையாடும் இத்த... மேலும் பார்க்க

மதுரையில் Hockey Junior WC: இங்கிலாந்து vs நெதர்லாந்து - `விறு விறு போட்டி' இறுதியில் வென்றது யார்?

மதுரை, தமிழ்நாடு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 14வது சர்வதேச ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது நாள் முதல் போட்டி மிதமான மழையுடன் தொடங்கியது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கி... மேலும் பார்க்க