Athiradi: "எனக்கு பேசில் ஜோசப் சின்ன ரோல்தான் நடிக்கக் கொடுத்தான்" - சென்னையில் ...
K Rajan: அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் இன்று காலமானார். 85 வயதான கே. ராஜன். 'பிரம்மசாரிகள்', 'நினைக்காத நாளில்லை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர்.

தயாரிப்பு மட்டுமின்றி, 'நம்ம ஊரு மாரியம்மா' என்கிற திரைப்படத்தையும் இவர் இயக்கியிருக்கிறார். அத்துடன் 'தங்கமான தங்கச்சி' உள்ளிட்ட சில படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியவர், சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டாதாகச் சொல்லப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த சில காலமாக, தமிழ் சினிமா நிகழ்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசி வந்தவர் அதற்காகப் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.
இவருடைய மகன் கே.ஆர். பிரபுதான் ஆர்.ஜே. பாலாஜியின் 'எல்.கே.ஜி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது.
தயாரிப்பாளர் கே. ராஜனின் மறைவிற்குத் தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.













