செய்திகள் :

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

post image

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், சமீபகாலமாக அவர் தென்னிந்திய படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம், `இந்திப் படங்களை ஏன் இவ்வளவு கவனமாகத் தேர்ந்தெடுக்கிறீர்?, தென்னிந்திய சினிமாவிடம் பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்ன?, திரைத்துறையில் பெண்களைச் சித்தரிக்கும் விதம் எவ்வாறு மாறியுள்ளது?' என்பன குறித்து கேட்கப்பட்டது.

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால்

அதற்கு பதிலளித்த நடிகை காஜல் அகர்வால், ``எனக்கு எப்போதும் வேலையின் தரம்தான் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் எனக்குக் கிடைத்த தரமான கதாபாத்திரங்கள் பாலிவுட்டில் கிடைக்கவில்லை. எண்ணிக்கையை விட தரத்திற்கே நான் முன்னுரிமை கொடுத்தேன்.

தென்னிந்திய சினிமா அத்தகைய வாய்ப்புகளை எனக்குத் தாராளமாக வழங்கியபோது, நான் ஏன் பாலிவுட்டில் சாதாரணமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்?" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ``திரைப்படங்களில் மொழியை நான் என்றுமே ஒரு தடையாகப் பார்த்ததில்லை. எனக்குத் தேவை அர்த்தமுள்ள கதைகள் மட்டுமே. நடிப்புத் துறையின் மீது காதல் வர எனக்கு ஏழு படங்கள் தேவைப்பட்டன. ஆனால், ஒருமுறை நடிப்பை நேசிக்கத் தொடங்கியதும், முழு அர்ப்பணிப்போடு அதில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன்.

பாலிவுட் தென்னிந்திய சினிமாவிடம் இருந்து 'நேரம் தவறாமையை' கற்றுக்கொள்ள வேண்டும். இந்திப் படங்களில் எதுவும் சரியான நேரத்திற்கு நடப்பதில்லை. ஆனால் தென்னிந்தியாவில், கடிகார நேரத்திற்கு ஏற்பக் கட்டுப்பாட்டுடன் வேலை செய்கிறார்கள். நான் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று பழகியவள், அந்த ஒழுக்கமே எனக்குப் பிடிக்கும்.

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால்

நடிகர் சல்மான் கான் தான் என்னை மிகவும் நீண்ட நேரம் காத்திருக்க வைத்தார். அவர் மதியமோ அல்லது மாலையிலோதான் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவார். அது எனக்கு பழகாத ஒன்று. எனக்கு அதிக நேரம் கிடைத்ததால், படப்பிடிப்புத் தளத்திலேயே இருந்த உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று விடுவேன். தென்னிந்திய சினிமாவின் நேரக் கட்டுப்பாட்டிற்கு நான் அவ்வளவு தூரம் பழகியிருந்தேன். தென்னிந்திய சினிமாவில் பெண்களைச் சித்தரிக்கும் விதம் மாறியுள்ளது.

தற்போது பெண்களுக்கு வலிமையான மற்றும் சுதந்திரமான கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன. பெண்களின் இடுப்பை மட்டுமே மையமாகக் காட்டும் நிலை இப்போது மாறிவிட்டது. நான் எப்போதும் அத்தகைய காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக எல்லை வகுத்திருந்தேன்" என்றார்.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழும் காஜல் அகர்வால், தொடர்ந்து பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படத்திலும், நிதேஷ் திவாரியின் 'ராமாயணம்' படத்தில் 'மண்டோதரி' கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

ஜன நாயகன்: "அதை எதிர்த்து சண்டைப்போடுவதற்கான நேரம் எங்களிடம் இல்லை" - தடைகள் குறித்து அ. வினோத்

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

CJP: "இது அரசியல் இல்லை... மனிதநேயம்!" - டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு வரலட்சுமி ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

பிதாமகன் : அன்பின் ஈரம்! | ஆதி தாமிரா | சினி'ஸ்கோப் 08

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!சினி'ஸ்கோப் 08பிதாமகன் : அன்பின் ஈரம்!”பெத்தவ புகையோடிப் போச்சேவளத்தவன் புகைகூட... மேலும் பார்க்க

National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க