செய்திகள் :

KH x RK: "நெல்சனின் ஐடியா எனக்கு பிடித்திருந்தது" - ரஜினி - கமல் படம் பற்றி ராஜீவ் மேனன்

post image

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர்.

இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்புப் புரோமோ சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள 'பேட்ரியாட்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் ராஜிவ் மேனன்.

இவர் தற்போது மலையாளத்தில் அளித்திருக்கும் பேட்டியில் ரஜினி - கமல் படம் பற்றி பகிர்ந்திருக்கிறார்.

KH x RK
KH x RK

"இயக்குநர் நெல்சன் எனக்கு தொலைபேசியில் அழைத்து இந்தப் படம் குறித்துப் பேசினார். அவர் கதையை விவரிக்கும் விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் , மிகுந்த நகைச்சுவையுடன் அவர் கதை சொல்லும் பாங்கு நம்மைச் சிரிக்க வைக்கும்.

அவர் கதையைக் கூறி முடித்ததும், 'சார், இதற்கு நீங்கள் ஒளிப்பதிவு செய்கிறீர்களா?' என்று கேட்டார். 'நிச்சயமாக! இந்த ஐடியாவே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என்று கூறி உடனடியாகச் சம்மதம் தெரிவித்தேன்.

நெல்சன் அழைத்த ஒரு வாரத்திலேயே புரோமோ படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். படத்தின் நாயகர்கள் யார் என்பது குறித்து எனக்கு ஒரு சிறிய குறிப்பை மட்டும் அப்போது அளித்திருந்தார்.

நான் கமல்ஹாசனுடன் ஏற்கனவே விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளேன். ஆனால், ரஜினிகாந்திற்கு நான் ஒளிப்பதிவு செய்வது இதுவே முதல்முறை. இந்த புரோமோ படப்பிடிப்பு அனுபவம் மிகவும் உற்சாகமாகவும், கலகலப்பாகவும் அமைந்தது.

முக்கியமாக, இரு பெரும் சூப்பர் ஸ்டார்களின் அந்தஸ்தை ஓரம் கட்டிவிட்டு, அவர்களைச் சாதாரண மனிதர்களாகக் கொண்டு வந்த நெல்சனின் ஐடியா எனக்குப் பிடித்திருந்தது.

ராஜீவ் மேனன்
ராஜீவ் மேனன்

இக்கதை இன்றைய தலைமுறை இளைஞர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எனது நீண்டகாலத் திரைப் பயணத்தில் நான் செய்த பணிகளுக்கு வராத அளவிற்கு, இந்தப் படத்தின் புரோமோ வெளியான பிறகு எனக்கு பாராட்டுக் குரல்கள் வந்தன.

ரஜினி மற்றும் கமல் இருவரும் தற்போது தங்களது பிற பணிகளில் மும்முரமாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

RB Choudary: ஏற்றுமதி பிசினஸ் டு சினிமா; 35 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை - தெரியாத கதைகள்!

தமிழ்த் திரையுலகை மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மரணம். 'நாட்டாமை', 'பூவே உனக்காக', 'ஜில்லா' உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்... மேலும் பார்க்க

'ஆளுநரின் இந்த செயல் அருவருப்பானது; விஜய்யை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்!' - பிரகாஷ் ராஜ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுகவில் இருந்து ... மேலும் பார்க்க

RB Choudary: "என் 100வது படத்தில் நீங்கதான் நடிக்கணும்னு சொல்லியிருந்தார்" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களைத் தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. ... மேலும் பார்க்க

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க