செய்திகள் :

Kollywood: அஜித் டு கார்த்திக் சுப்புராஜ்; களைகட்டும் அப்டேட்கள் - இது கோலிவுட் புதிய அறிவிப்புகள்!

post image

கடந்த மூன்று நாட்களாகத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.

எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, புதிய படங்களின் அறிவிப்பு எனப் பல அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. அந்த அப்டேட்களையெல்லாம் இங்கு பார்ப்போமா...

Ajithkumar - Dare Devil
Ajithkumar - Dare Devil

கார்த்தி - மோகன் ராஜா படம்:

இயக்குநர் மோகன் ராஜாவுக்குச் சினிமாவில் இது 25-வது ஆண்டு. இந்த ஸ்பெஷல் தருணத்தில் நடிகர் கார்த்தியுடன் ஒரு புதிய படத்திற்குச் கை கோத்திருக்கிறார் மோகன் ராஜா. கார்த்தியின் 31-வது படத்தை இவர் இயக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தின் மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் கூறியிருக்கிறார்கள்.

அஜித் அப்டேட்கள்:

இந்த வாரம் அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். ஆம், அஜித் நடிக்கும் இரண்டு படங்களின் அப்டேட்கள் இந்த வாரம் வெளிவந்திருக்கின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அனிருத் இசையில் அஜித்குமார் நடிக்கவிருக்கும் 'டார்டெவில்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டைட்டிலோடு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

பிறகு, இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும், அஜித்தின் ரேஸிங் பற்றிய ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்திற்கு 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்ஷூட் ஆஃப் சேலஞ்சஸ்' எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களுக்காக இதனைத் தியேட்டர் ரிலீஸாகக் கொண்டு வருகிறார்கள்.

ஜீவாவின் 'தகப்பன்':

'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜீவா, இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் 'கிடா' படத்தை இயக்கியவர். 'மாமன்', 'கருடன்' போன்ற படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, இந்தப் படம் இந்தாண்டு டிசம்பரில் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறது.

ஒன்ஸ் மோர் திரைப்படம்
ஒன்ஸ் மோர் திரைப்படம்

'ஒன்ஸ் மோர்' ரிலீஸ்:

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஒன்ஸ் மோர்' படத்தின் அறிவிப்பு கடந்த 2024-ம் ஆண்டே வெளிவந்திருந்தது. படத்தின் பாடல்களும் வெளியாகி, எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருந்தன. அப்போதே, படம் 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், அப்போது ரிலீஸ் மாற்றப்பட்டது. இடைவெளிக்குப் பிறகு இப்போது படத்தை ரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார்கள். இம்மாதம் 28-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

மூடர்கூடம் 2:

இயக்குநர் நவீன் இயக்கத்தில் 'மூடர்கூடம்' திரைப்படம், கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை 13 வருடங்களுக்குப் பிறகு தொடங்கியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர்களே, நவீன் இயக்கும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜின் டோரதி:

கார்த்திக் சுப்புராஜின் 10-வது படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு 'டோரதி' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜின் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதையாம். இதுமட்டுமல்ல, டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க