செய்திகள் :

Leader: "சரவணன் 50 வயதைத் தாண்டி நடிக்க வந்திருப்பதாகச் சொன்னார்கள்; ஆனால்..." - பாக்யராஜ்

post image

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

'Leader' Movie Team
'Leader' Movie Team

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ், "லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசுவதை நான் கேட்டுக் கொண்டேதான் இருந்தேன். அதிலிருந்து எனக்கு தெளிவாகப் புரிந்தது என்னவென்றால், அவர் நினைத்ததைத் தைரியமாகச் செய்து முடிப்பவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவார்.

அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். 50 வயதைத் தாண்டி அவர் நடிக்க வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால், 25 - 30 வயதிற்கான உடலை அவர் வைத்திருக்கிறார். இந்த அளவுக்கு உற்சாகமாக சினிமாவில் நடிக்க வருவது சாதாரண விஷயம் இல்லை.

அது ஒரு பெரிய சாதனை. 'லெஜெண்ட்' படத்திற்குப் பிறகு 'லீடர்' என்ற தலைப்பில் வருவது மிகவும் பொருத்தமானதும், வலிமையானதுமாக இருக்கிறது.

லீடர் படக்குழு
லீடர் படக்குழு

இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு இது சவாலான முயற்சிதான். டிரெய்லரைப் பார்த்தபோது மக்கள் அளித்த வரவேற்பு இந்தப் படத்தின் வெற்றியை முன்பே காட்டுகிறது.

படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் அது உருவாக்கியுள்ளது. இந்தப் படம் பெரும் செலவில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளும், கதையும் நிறைந்த ஒரு முழுமையான படமாக இருக்கும்.

சரவணன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் வரவில்லை. அவர் நினைத்ததைச் சாதிக்கவும், சினிமாவிற்கு ஒரு சேவையாகவும் வந்திருக்கிறார்.

அவர் தொடர்ந்து இந்தத் துறையிலிருந்து, பல நல்ல படங்களை வழங்கி, பலருக்கும் உதவி செய்ய வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

ஜனநாயகன்: 'விஜய் சாரை கடைசி முறையாக திருவிழா போல் கொண்டாட வேண்டாமா?'- பூஜா ஹெக்டே ஆதங்கம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. ஆனால், சென்சா... மேலும் பார்க்க

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" - 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம்நேற்று இரவு, 'ஜனநாய... மேலும் பார்க்க

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிற... மேலும் பார்க்க

What To Watch: 'LIK', 'தாய் கிழவி', 'TN 2026' - இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:நயன்தாரா மற்றும் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌர... மேலும் பார்க்க

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! - லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா?

2040-ல் பசுமை உலகத்தில் வைப் வாசேவும் (பிரதீப் ரங்கநாதன்) அவருடைய தந்தை அன்புகடலும் (சீமான்) வசித்து வருகிறார்கள். அலைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்பதே இந்த பசுமை உலகத்தின் ... மேலும் பார்க்க