செய்திகள் :

Leader: "லெஜண்ட் சரவணன் போல தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் சினிமாவுக்கு தேவை" - நடிகர் ஷ்யாம்

post image

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

'Leader' Movie Team
'Leader' Movie Team

நடிகர் ஷ்யாம் பேசுகையில், "கருடன் படத்தைப் பார்த்த பிறகு என் நண்பர்களிடம், இயக்குநர் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்க வேண்டும் என்றேன்.

அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாகக் கையாண்டிருக்கிறார் என்றேன். இதைச் சொன்ன சில நாள்களில் இயக்குநர் துரை செந்தில்குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது.

அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புள்ள இயக்குநரவர்.

அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் தன்மையும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும். சினிமா பிளாட்பார்மை மிகத் தரமாகப் பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.

இந்த விஷயம்தான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார். இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.

எல்லோரும் லெஜண்ட் சரவணனின் மற்றொரு முகத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சைக் கேட்டு ரசித்திருக்கிறேன்.

Shyam
Shyam

வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார்.

நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை" எனக் கூறியிருக்கிறார்.

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) - தமிழ்:மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏ... மேலும் பார்க்க

Chiyaan 63: மீண்டும் 'இருமுகன்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம் - டேக் ஆப் ஆகும் சீயான் 63

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய 63-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு மார்ச் மாதம் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ... மேலும் பார்க்க

Mr. X Review: ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல், ஸ்பை த்ரில்லர் - புதிய களம் படமாக வலுப்பெறுகிறதா?

ரா அமைப்பில் உளவாளிகளாக இருக்கும் கௌதம் (ஆர்யா) & டீம் சென்னையில் ஹவாலா குற்றங்களைப் பிடித்துவருகிறார்கள். நீண்ட வருடங்களுக்கு முன்பு சோதனைக்காக நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்லப்படும் அணு சாதனம்... மேலும் பார்க்க

Hansika Motwani: "தவறான ரயிலில் பயணிக்க முடியுமா?" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமண... மேலும் பார்க்க