செய்திகள் :

LIK: "அந்த நேரத்துல என்னை மொக்கை பீஸ்னு சொல்லாமல் சொல்லுவாங்க" - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

post image

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

'டிராகன்', 'டியூட்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸாக மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகிறது இப்படம்.

LIK - Pradeep Ranganathan
LIK - Pradeep Ranganathan

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று பிரமாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய விக்னேஷ் சிவன், "நான் மிகப்பெரிய படமொன்று செய்கிற மாதிரி மிகப்பெரிய வாய்ப்பு ஒண்ணு எனக்கு அமைஞ்சது.

கல்யாணத்துல தாலி கட்டும்போது, மாப்பிள்ளை எழுந்து போயிட்டால், அந்தப் பொண்ணுக்குத் திருமணம் நடக்கிறது எத்தனை கஷ்டமோ அது மாதிரிதான் ஒரு படம் டிராப்ல இருந்து அடுத்த படத்துக்கு டேக் ஆஃப் ஆகுறது கஷ்டம்.

அந்த நேரத்துல சின்னதாக படம் பண்ணுங்க, ஈஸியாகப் பண்ணுங்கங்கிற வார்த்தைதான் நம்ம காதுல விழும்.

Vignesh Shivan - LIK
Vignesh Shivan - LIK

அந்த நேரத்துல என்னை ஒரு மொக்கை பீஸாகப் பார்க்கிறாங்க என்பதை சொல்லாமல் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதை ஒரு முறை அனுபவித்தால் அது வேற. இதுபோல, நான் பல முறை அனுபவித்திருக்கேன்.

'நானும் ரௌடி தான்' திரைப்படம் சென்சார் ஆனதுக்குப் பிறகும் யாரும் நல்லாயிருக்குனு சொல்லல. எனக்கும், தியேட்டருக்குள்ள வர்ற ஆடியன்ஸோட கனெக்‌ஷனை நம்பி வாழ்கிறவன்தான் நான்.

அந்த நாள் ஏப்ரல் 10. அதுக்காக காத்திட்டிருக்கேன். என்னுடைய கதை மீது இருந்த நம்பிக்கை சிறக்கும்னு நம்புறேன்" என்றார்.

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) - தமிழ்:மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏ... மேலும் பார்க்க

Chiyaan 63: மீண்டும் 'இருமுகன்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம் - டேக் ஆப் ஆகும் சீயான் 63

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய 63-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு மார்ச் மாதம் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ... மேலும் பார்க்க

Mr. X Review: ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல், ஸ்பை த்ரில்லர் - புதிய களம் படமாக வலுப்பெறுகிறதா?

ரா அமைப்பில் உளவாளிகளாக இருக்கும் கௌதம் (ஆர்யா) & டீம் சென்னையில் ஹவாலா குற்றங்களைப் பிடித்துவருகிறார்கள். நீண்ட வருடங்களுக்கு முன்பு சோதனைக்காக நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்லப்படும் அணு சாதனம்... மேலும் பார்க்க

Hansika Motwani: "தவறான ரயிலில் பயணிக்க முடியுமா?" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமண... மேலும் பார்க்க