செய்திகள் :

LIK: "சீமான் சார்கிட்ட தமிழ் கத்துக்கிட்டேன்!" - கீர்த்தி ஷெட்டி

post image

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

'டிராகன்', 'டியூட்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸாக மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகிறது இப்படம்.

LIK - Pradeep Ranganathan
LIK - Pradeep Ranganathan

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ரிலீஸையொட்டி நம்முடைய சினிமா விகடன் யூட்யூப் சேனலுக்கு கீர்த்தி ஷெட்டி பேட்டியளித்திருக்கிறார்.

கீர்த்தி ஷெட்டி, "சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியிருக்கிறது. அவரிடம் தமிழ் கத்துக்கிட்டேன். அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் மேஜிக்கலாக இருக்கும்.

செஃல்பி, போன் என அத்தனைக்கும் தமிழ் வார்த்தைகளைதான் அவர் உபயோகப்படுத்துவார்.

எந்தவொரு விஷயம் சொன்னாலும், அதனை கச்சிதமாக தமிழில் சொல்லுவார். இந்த விஷயம் பற்றியெல்லாம் அப்போது எனக்கு அவ்வளவாக புரியவில்லை.

Krithi Shetty
Krithi Shetty

ஆனால், தமிழ் இப்போது அதிகமாக புரிந்துக் கொள்ளும் அளவிற்கு வந்த பிறகுதான் அவையெல்லாம் எனக்கு புரிகின்றன." என்றவர், "பிரதீப் ரங்கநாதனிடம் ஏதோ மேஜிக் இருக்கிறது.

உண்மையாகவே, அவர் ஒரு சிறந்த நடிகர். படத்தில் பல இடங்களில் சிறப்பான பணியை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

ஒரு நடிகராக அதை நான் பார்க்கும்போது எனக்குள் 'வாவ்' மொமண்ட்தான் ஏற்பட்டது. அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என சிரத்தைக் கொடுப்பார்." எனக் கூறியிருக்கிறார்.

ko 15: "உங்களின் முதல் தொலைபேசி அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது..!"- கே.வி.ஆனந்த் குறித்து ஜீவா

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'கோ'. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் ரிலீஸாகி இன்றுடன் 15... மேலும் பார்க்க

"அவர் பாடகர்னுகூட தெரியாது; அதனால என் பசங்க படிப்பும் நின்னுடுச்சு!" - கலங்கும் ரிச்சர்ட் மனைவி

பின்னணிப் பாடகர் ரிச்சர்ட் அலிசன் நாதன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுச் சிரமங்களைச் சந்தித்து வரும் அவருடைய குடும்பத்தினருக்குச் சமீபத்தில் கே.பி.ஒய் பாலா உதவி செய்... மேலும் பார்க்க

"நான் ஹீரோவாக அறிமுகமாகிறேனா?" - விளக்கமளிக்கும் சாய் அபயங்கர்

தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான். சூர்யாவின் 'கருப்பு', அல்லு அர்ஜுனின் 'ராக்கா' எனப் பல பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர். இதில், சூ... மேலும் பார்க்க

விஜய்: "இது ஒரு மாற்றம், ஒரு எழுச்சி, ஒரு மௌனப் புரட்சி" - எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட காணொளி

ஏப்ரல் 23-ம் தேதி, வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது. இன்று மாலையோடு பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைகின்றன. விஜய்யின் தவெக-வும் முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. விஜய்க்கு ஆதரவாக நடிகர்கள் பலரும் பிரச... மேலும் பார்க்க

"அதில் ரஹ்மான் சாருக்கு எந்த தயக்கமும் இல்லை!" - 'கருப்பு' பற்றி சாய் அபயங்கர்

தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான். சூர்யாவின் 'கருப்பு', அல்லு அர்ஜுனின் 'ராக்கா' எனப் பல பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர். இதில், சூ... மேலும் பார்க்க