'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு ...
Lionel Messi: 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த மெஸ்ஸி; மூன்று நாள் பயணத்திட்டம் இதுதான்!
'GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்திருக்கிறார்.
விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.

கடைசியாக 2011-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக விளையாட மெஸ்ஸி கொல்கத்தா வந்திருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அவர் இந்தியா வருகிறார்.
இதுகுறித்து டூர் அமைப்பாளர் சதத்ரு தத்தா கூறுகையில், "14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய கால்பந்துக்கும் உலக அரங்கிற்கும் உள்ள தொடர்பு மீண்டும் வளர்கிறது" என்று கூறியிருக்கிறார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, உலக கோப்பையை தாங்கிய 70 அடி உயரமுள்ள தனது உருவ சிலையை காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஹைதராபாத் சென்று அங்கு நடக்கும் போட்டியில் விளையாடுகிறார்.

இதனையடுத்து நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் பேஷன் ஷோவில் பங்கேற்க உள்ளார். மூன்றாவது நாள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.
Just in
— FTino (@FernadoTin10172) December 13, 2025
People waited until 3 a.m. just to see Messi land in Kolkata India. This is beyond football, a nation without a deep football history, yet completely captivated by one man. Lionel Messi ❤️
Messi Craze is Unreal pic.twitter.com/XdVcVb6bq4



.jpg)















