செய்திகள் :

Madhampatty Rangaraj: "கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை" - ஜாய் கிறிஸ்டில்டா

post image

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார்.

பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத்தை மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜாய் கிறிஸ்டில்டா, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், மாதம்பட்டி ரங்கராஜிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டும் என்றும் கோரி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

நேற்றைய தினம் ஜாய் கிறிஸ்டில்டாவுக்கும் தனக்கும் பிறந்த மகன்தான் இவர் என்றும், தந்தையாக அத்தனை கடமைகளையும் தான் கவனித்துவருவதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். தற்போது இது குறித்து ஜாய் கிறிஸ்டில்டா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஜாய் கிறிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிறிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ்

அவர், "கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள், முடியாத கேள்விகள் மற்றும் ஒரு தாயால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்த போராட்டங்களுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. உலகிற்கு நான் காட்டிய ஒவ்வொரு சிரிப்புக்குப் பின்னாலும் ஆயிரம் துளிக் கண்ணீர் மறைந்திருந்தது.

எனது மகன், ஒவ்வொரு குழந்தையும் பெறத் தகுதியான அவனுக்கான சரியான அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை இறுதியாகப் பெற்றுவிட்டான். மக்கள் தலைப்புச் செய்திகளைப் பார்த்தார்கள். மக்கள் கருத்துகளைப் பார்த்தார்கள். மக்கள் சமூக வலைத்தளங்களைப் பார்த்தார்கள். ஆனால், அமைதியில் கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை.

தன்னையே கேள்வி கேட்டுக்கொண்ட ஒரு தாயைப் பார்க்கவில்லை. தன் குழந்தைக்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்து நின்ற ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை. இந்தப் பயணம் யார் சரி, யார் தவறு என்று நிரூபிப்பதற்கானது அல்ல. இது எப்போதுமே ஒரு குழந்தைக்குச் சேர வேண்டிய அங்கீகாரம், அன்பு மற்றும் பாதுகாப்பிற்கானது.

இது எதையோ நிரூபிப்பதற்காக அல்ல. நான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகப் போராடவில்லை. என் மகன் ராகா ரங்கராஜ் ஒருநாள் விழித்தெழுந்து தன் சுயமரியாதையைக் கேள்வி கேட்கும் நிலை வரக்கூடாது என்பதற்காகவே நான் போராடினேன்.

நீ அன்பையும், மரியாதையையும், இந்த உலகில் உனக்கான சரியான இடத்தையும் பெற முழுத் தகுதியானவன் என்பதை எந்தச் சந்தேகமும் இன்றி நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இந்தச் சிறுவன் ராகா ரங்கராஜ், தான் யார் என்ற கேள்வியோடு வளரக்கூடாது என்பதில் மட்டுமே உறுதியாக இருந்தேன்.

மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ்

இன்று, அவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன். இது எப்போதுமே ஒரு தாய் தன் மகனுக்குக் கொடுத்த வாக்குறுதி சார்ந்த விஷயம். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக மாறினாலும், உனக்குச் சேர வேண்டிய உரிமைகளுக்காகப் போராடுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை மாதக்கணக்கில் சுமந்த பிறகு, இன்று என் இதயம் இறுதியாக அமைதியடைந்துள்ளது. இனி யாராவது என்னிடம் என் வாழ்வின் மிகப்பெரிய சாதனை எது என்று கேட்டால், என் பதில் புகழோ, வெற்றியோ அல்லது அங்கீகாரமோ அல்ல. என் பதில் எப்போதுமே இதுவாகத்தான் இருக்கும். என் மகனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க