செய்திகள் :

Mamitha Baiju: "நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன்!" - 'நாளை நாளை' ட்ரோல் குறித்து மமிதா பைஜூ

post image

மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

'ப்ரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகே தமிழில் வரிசையாகப் படங்களை கமிட் செய்தார்.

மமிதா பைஜூ
மமிதா பைஜூ

அவர் நடித்திருக்கும் 'ஜனநாயகன்', 'கர', 'சூர்யா 46', 'இரண்டு வானம்' ஆகிய திரைப்படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இவற்றைத் தாண்டி, மலையாளத்தில் 'ப்ரேமலு' பட இயக்குநர் கிரீஷ் ஏ.டி. நிவின் பாலியை வைத்து இயக்கும் 'பெத்தல்கம் குடும்ப யூனிட்' படத்திலும் மமிதா பைஜூ நடித்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்றிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

அந்த நிகழ்வில் மமிதா பைஜூ, விஜய்யின் 'எல்லா புகழும்' பாடலின் ஓரிரு வரிகளை மேடையில் பாடியிருந்தார். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டது.

Mamitha Baiju

சமீபத்தில், அனஸ்வரா ராஜன், அபிஷன் ஜீவிந்த் நடித்திருக்கும் 'வித் லவ்' படத்தைப் பார்ப்பதற்கு வந்த மமிதா பைஜூவிடம் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

அதில் இந்த ட்ரோல்கள் குறித்தும் கேட்டனர். அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, "மக்கள் இதை வெறும் பொழுதுபோக்காகவே பார்க்கிறார்கள். நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன். அது நல்ல ஃபன்!" என்று கூறியிருக்கிறார்.

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?

கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார்.படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளை... மேலும் பார்க்க

`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) ப... மேலும் பார்க்க

AK - SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பவுனுத்தாயி (ராதிகா). கணவனைப் பிரிந்துவந்த தன் மகளோடு (ரேச்சல் ரெபேக்கா) வாழ்ந்து வரும் அவர், ஊர்க்காரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதை ... மேலும் பார்க்க

தாய் கிழவி : "சினிமாவை ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு"- ஜோதிகா பாராட்டு

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க