செய்திகள் :

Manifesto: தேர்தல் வாக்குறுதியில் தீவிரம் காட்டும் கட்சிகள் - மக்களே உங்க கோரிக்கை என்ன? பகிருங்கள்!

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தவிர மார்ச் 15 வாக்கில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்போம் என்றும், இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகனாக அல்லாமல் கதாநாயகியாகவும் இருக்கும் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கை பணியில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றன.

அதிரடியாக தேர்தல் அறிக்கை தயாரித்து வரும் அரசியல் கட்சிகளிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

விவசாயம், விளையாட்டு, கல்வி போன்ற துறைகளில் எந்த மாதிரியான வாக்குறுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

மாதந்தோறும் மகளிர் உதவித்தொகையாக 2000 ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்கப்பட வேண்டுமா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

மதுவிலக்கு ஒழிப்பு வாக்குறுதி குறித்து உங்கள் கருத்து என்ன?

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் எப்படி இருக்க வேண்டும்?

தேர்தல் வாக்குறுதி தொடர்பாக உங்களின் கோரிக்கை வேலை வாய்ப்பா? கல்வி மேம்பாடா? விவசாய கடன் தள்ளுபடியா? குடிநீர் வசதியா? மருத்துவ வசதியா? விலைவாசி குறைப்பா? பெண்கள் பாதுகாப்பா? சாலை வசதியா? மின்சார இலவசமா?

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு முக்கிய கோரிக்கையை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கையே மக்களின் தேர்தல் அறிக்கையாக மாறட்டும்!

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க