நெல்லை: தொடரும் கனமழை; அருவி சுற்றுலாத் தலங்கள் மூடல்; வாழை பயிர்கள் சேதம் #Rain...
Menstrual Masking: மாதவிடாய் ரத்தத்தை பூசினால் முகம் பொழிவாகுமா? - எச்சரிக்கும் மருத்துவர்
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில விசித்திரமான அழகுக்குறிப்புகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. 'மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்' (Menstrual Masking) என்று அழைக்கப்படும் இந்த முறையில், பெண்கள் தங்கள் மாதவிடாய் ரத்தத்தையே முகத்தில் பூசிக் கொள்கிறார்கள்.
இது சருமத்திற்கு பொலிவை தரும் என்று கருதி இதனை பயன்படுத்துகின்றனர் ஆனால், இதில் மறைந்துள்ள ஆபத்துகள் குறித்து தோல் மருத்துவர் எச்சரித்துள்ளார்.
மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்
பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை சேகரித்து, அதை முகத்தில் ஒரு 'பேஸ் மாஸ்க்' போல பூசிக் கொள்வதையே 'மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்' என்கின்றனர். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த ரத்தத்தை முகத்தில் வைத்துவிட்டு, பின்னர் கழுவி விடுகிறார்கள்.
இந்த வினோத பழக்கம் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் போன்ற செயலிகளில் வேகமாக பரவி வருகிறது.

'மாதவிடாய் ரத்தம் சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும், முகப்பொலிவை அதிகரிக்கவும் உதவும்' என்று இதனை பயன்படுத்துவோர் நம்புகிறார்கள்.
ஆனால் இந்த முறை ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிகின்ற்றனர்.
இது குறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா ராகுல் நம்மிடம் பேசுகையில்,
"மாதவிடாய் ரத்தத்தில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் இருக்கின்றன. குறிப்பாக 'ஸ்டாஃபிலோகாக்கஸ் ஆரியஸ்' (Staphylococcus aureus) போன்ற கிருமிகள் இதில் உள்ளன. முகத்தில் சிறிய வெட்டுக்களோ அல்லது துளைகளோ இருந்தால், இதன் மூலம் கடுமையான தொற்றுகள் ஏற்படலாம். பால்வினை நோய்த்தொற்றுகள் முகத்திற்கு பரவும் அபாயமும் இதில் உள்ளது.

இப்படி மாதவிடாய் ரத்ததை முகத்தில் பூசினால் பொழிவு கிடைக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, சிலர் இந்த முறையினை 'பிஆர்பி' (PRP) சிகிச்சையுடன் ஒப்பிடுகிறார்கள், ஆனால் பிஆர்பி சிகிச்சை சரியான அளவில் அவர்களின் ரத்ததையே எடுத்து சிகிச்சை வழங்கப்படுகிறது, அது முற்றிலும் பாதுக்காப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், மாதவிடாய் ரத்தத்தை நேரடியாக முகத்தில் பூசுவது ஆபத்தானது.
எந்தவொரு மருத்துவ அங்கீகாரமும் இல்லாத, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத இத்தகைய ஆபத்தான முயற்சிகளை பெண்கள் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.















