செய்திகள் :

MGR காலத்து அரசியல் குடும்பம்; விஜய் நண்பர் - தூத்துக்குடியில் அமைச்சரையே வீழ்த்திய ஸ்ரீநாத் யார்?

post image

விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் இறுதி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார் ஸ்ரீநாத். கல்லூரி காலம் முதலே விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத், விஜய் தனது திரைப்பயணத்தை தொடங்கியபோதே ஸ்ரீநாத்தும் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். 'வேட்டைக்காரன்' போன்ற பல படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். ஸ்ரீநாத்தை வெறும் காமெடி நடிகர் என சுருக்கிவிட முடியாது. அவர் இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.

கீதாஜீவன்

குறிப்பாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற காமெடி படத்தை இயக்கிவர் இந்த ஸ்ரீநாத்தான். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான ஜி.ஆர்.எஸ்மெண்டுவின் உடன் பிறந்த சகோதரி மகன் தான் ஸ்ரீநாத்.  

தூத்துக்குடி த.வெக-வில் பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அவருக்கு பதவி வழங்கப்படவில்லை. அதனால், சென்னை பனையூரில் விஜய்யின் காரை வழி மறித்ததுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர், தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.  இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் யாருக்கு சீட் கொடுக்கலாம் என்று விஜய்க்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போதுதான் தனது நண்பரான ஸ்ரீநாத்தை களமிறக்க முடிவு செய்தாராம் விஜய். முதலில் தயங்கிய ஸ்ரீநாத், பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநாத் 1,00,536 வாக்குகளும், தி.மு.க வேட்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன், 62,805 வாக்குகள் பெற்றனர். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த நிலையில், சீட்டும் வழங்கப்படவில்லை. இதனால், “த.வெ.க-வில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பணம் வாங்கிக் கொண்டுதான் பதவி வழங்கப்படுகிறது” என விமர்சித்தார் அஜிதா.

விஜய் - ஸ்ரீநாத்

 பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்து த.வெ.கவிற்கு எதிராக பிரசாரம் செய்தார். ஆனால், அவரது பிரசாரம் எடுபடவில்லை. ஸ்ரீநாத்தை வெறும் காமெடி நடிகராகவே சித்தரித்து தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால், தமிழகத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று சிட்டிங் அமைச்சர் கீதா ஜீவனையே வீழ்த்தியுள்ளார் ஸ்ரீநாத்.     

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க