செய்திகள் :

Micheal Jackson: தயாராகும் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்! - மைக்கேல் ஜாக்சனாக நடிக்கும் அண்ணன் மகன்

post image

மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான `மைக்கேல்' படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

மைக்கேல் ஜாக்சனின் சகோதரரான ஜெர்மெயின் ஜாக்சனின் மகன் ஜாஃபர் ஜாக்சன்தான் இந்த ஆட்டோபயோகிராஃபி படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்காக தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு படத்திற்குள் வந்திருக்கிறார் ஜாஃபர்.

நேற்றைய தினம் வெளியான டீசரில் மைக்கேல் ஜாக்சனின் உடைகளை அணிந்து அவரைப் போல நடனமாடுவதை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகனை நடிக்க வைக்க முடிவு செய்தது குறித்து இப்படத்தின் இயக்குநர் ஆண்டோயின், "நான் ஜாஃபரை முதல் முறையாக சந்தித்தபோது அவரிடம் ஸ்பிரிட்சுவல் தொடர்பு தெரிந்தது.

மைக்கேல் ஜாக்சனை இயல்பாகப் பிரதிபலிக்கும் திறன் அவரிடம் இருந்தது. அதுமட்டுமல்ல, ஜாஃபரின் முகத்திற்கும் கேமராவுக்கும் அழகான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சனின் கதாபாத்திரத்திற்கு உலகமெங்கும் பல நடிகர்களை தேடினோம்.

பிறகுதான், ஜாஃபர் சரியான தேர்வாக இருப்பார் என நடிக்க வைத்தோம்!" எனக் கூறியிருக்கிறார். இதைத் தாண்டி மைக்கேல் ஜாக்சனின் சிறு வயது கதாபாத்திரத்தில் ஜுலியானோ க்ரூ வால்டி என்பவர் நடித்திருக்கிறார்.

Micheal Jackson at Cannes Film Festival
Micheal Jackson at Cannes Film Festival

இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் தாயாராக நடித்திருக்கும் நியா லாங், "மைக்கேல் ஜாக்சனின் தாயார்தான் குடும்பத்திற்கு அற்புதமான வலிமையின் தூண்.

ஒரு தாயாக, அவர் தன்னலமற்றவராக இருந்தார். மைக்கேல் ஜாக்சனுடைய தாயாரின் குரலைத் திரைக்குக் கொண்டுவந்து, மைக்கேல் ஜாக்சனின் கதையை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்." என்றார்.

இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 24-ம் தேதி திரைக்கு வருகிறது.