செய்திகள் :

Mohanlal: "அது என்னுடைய தவறுதான்!'' - குழந்தைகள் குறித்து சுசித்ரா மோகன்லால்

post image

மோகன்லாலைத் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். விஸ்மயா மோகன்லால் நடித்திருந்த 'தொடக்கம்' திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந்தது.

நடிகர் மோகன்லாலின் பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவருக்கும் தாய்மொழியான மலையாளம் சரளமாகப் பேச வராதது குறித்து மோகன்லாலின் மனைவி சுசித்ரா மோகன்லால் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Mohanlal - Vismaya Mohanlal
Mohanlal - Vismaya Mohanlal

இதுகுறித்து அவர் கூறுகையில், "பிரணவ் ஆறாம் வகுப்பு படிக்கும்போதும், விஸ்மயா மூன்றாம் வகுப்பு படிக்கும்போதும் போர்டிங் ஸ்கூலில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால், அவர்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டிய சூழல் இருந்தது.

அவர்கள் வீட்டிற்கு விடுமுறைக்கு வரும்போதும் நான் அவர்களிடம் ஆங்கிலத்தில்தான் பேசுவேன். அது முற்றிலும் என்னுடைய தவறுதான். என்னுடைய குடும்பப் பின்னணியைப் பார்த்தால், என் தந்தை பாதி தமிழும் பாதி மலையாளமும் பேசுபவர்.

என் அம்மா முழுமையான மலையாளத்தைச் சேர்ந்தவர். அதனால் நாங்கள் வீட்டில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் என கலந்துதான் பேசுவோம். மேலும், மோகன்லால் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை.

அவர்களின் உறவினர் குழந்தைகளும் மெட்ராஸில் பிறந்து வளர்ந்ததால் அவர்களும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள்.

இதனால்தான் வளர வளர அவர்களுக்கு மலையாளத்துடனான தொடர்பு குறைந்துவிட்டது. இப்போது மாயாவுக்கு மலையாளம் புரியும், பேசவும் தெரியும்.

Mohanlal - Suchithra
Mohanlal - Suchithra

ஆனால், பேசுவதற்கு ஒரு தயக்கமும் தன்னம்பிக்கைக் குறைபாடும் இருக்கிறது. தவிர, என் பேச்சிலேயே தமிழ் கலந்த உச்சரிப்பு இருக்கும் என்று அனைவரும் சொல்வார்கள்.

பிரணவ் படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு, செட்டில் பலருடன் பேசிப் பேசி இப்போது அவரது மலையாளம் நன்றாக முன்னேறியிருக்கிறது. ஆனால் மாயா, ஒரு கதையைக் கேட்டால் வசனங்களைக் கற்றுக்கொள்ளவே ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் அவகாசம் கேட்கிறாள்.

ஆங்கிலத்தில்தான் ஸ்கிரிப்ட் படித்துப் புரிந்துகொள்கிறாள். அதனால்தான் அவள் புதுப் படங்களில் கமிட் ஆக கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கிறாள்" என்று பகிர்ந்திருக்கிறார்.

Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்

நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிற... மேலும் பார்க்க

Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" - அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியை வைத்து ‘பாதயாத்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார். 2016-இல் வெளியான ‘பின்னையும்’ திரைப்படத்திற்குப் பிறகு இ... மேலும் பார்க்க

Mohanlal: "நான் மோகன்லாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொன்னப்போ..." - சுசித்ரா மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகி... மேலும் பார்க்க

Premalu: "யாராலும் அப்படியே ரீமேக் செய்யவே முடியாது!"- 'பிரேமலு' இந்தி ரீமேக் பற்றி இயக்குநர் கிரிஷ்

மலையாளத்தில் ஹிட் அடித்த 'பிரேமலு' திரைப்படம், தற்போது 'பிரேம் கீட்டனு' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. Bethlehem Kudumba Unit வீர் பஹாரியா நாயகனாக நடிக்கும் இந்தப் படம் அக்டோபர் ... மேலும் பார்க்க

Nivin Pauly: "நான் மிகவும் சலிப்படைந்துவிட்டேன்" - 'பென்ஸ்' படப்பிடிப்பு குறித்து நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் 'பெத்லகெம் குடும்ப யூனிட்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.நிவின் ப... மேலும் பார்க்க

Drishyam 4: ``திரிஷ்யம் அடுத்த பாடம் வரும்" - தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதி!

திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் படத்தின் 4-ம் பாகம் உருவாகவுள்ளது எனத் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்திருக்கிறார்.கடந்த மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3', வெ... மேலும் பார்க்க