செய்திகள் :

Mohanlal: 'ஆர்வம் தரும் கதைகள்'; ஒரே நேரத்தில் 7 இயக்குநர்களின் படம்; மோகன்லால் தந்த சர்ப்ரைஸ்!

post image

நடிகர் மோகன்லால், தன்னுடைய அடுத்த 7 புதிய திரைப்படங்களை மொத்தமாக அறிவித்து ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், 'ஆர்வம் தரும் கதைகள், சுவாரஸ்யமான பயணங்கள் மற்றும் சில சிறப்புமிக்க இயக்குநர்கள்' எனக் குறிப்பிட்டு அந்த 7 இயக்குநர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

மோகன்லால்
மோகன்லால்

இயக்குநர்கள் விஷ்ணு மோகன், அனூப் சத்யன், பிரியதர்ஷன், திலீஷ் போத்தன், சத்யன் அந்திக்காடு, ஜூட் அந்தனி ஜோசப், ஜீத்து ஜோசப் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார் மோகன்லால்.

இதில் பிரியதர்ஷன் இயக்கவுள்ள படம், அவர் இயக்கும் 100-வது திரைப்படமாகும். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பே வந்திருந்தது.

அதேபோல, ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் சில மாதங்களுக்கு முன்பு 'த்ரிஷ்யம் 3' திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த ஹிட் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், மோகன்லால் நடித்திருந்த 'ஹ்ருதயபூர்வம்' படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது.

Mohanlal
Mohanlal

அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவிருக்கிறார். அதோடு அவருடைய மகன் அனூப் சத்யன் இயக்கத்திலும் மோகன்லால் நடிக்கவிருக்கிறார்.

சீனியர் இயக்குநர்களோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து மோகன்லால் களமிறங்குவது, அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohanlal: சபரிமலையில் மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு நடந்த அனுமதி மறுப்பு - பின்னணி என்ன?

மோகன்லால் மற்றும் இயக்குநர் தருண் மூர்த்தி கூட்டணியில் 'தொடரும்' திரைப்படம் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி மீண்டும் இணைந்தது. அந்தப் படத்திற்கு... மேலும் பார்க்க

"மனசோர்வுடன் இருக்கும்போதெல்லாம் அவரிடமிருந்து மெசேஜ் வரும்!" - நெகிழும் அனுபமா பரமேஸ்வரன்

'பிரேமம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் ஊடகவியலாளர் தன்யா வர்மாவுக்கு அளித்த பேட்டியில், காதலித... மேலும் பார்க்க

"நான், மம்மூட்டி, மோகன்லால் நடிக்கவிருந்த படம் கைவிட வேண்டிய சூழல்.!" - பிருத்விராஜ் ஓப்பன் டாக்

பிருத்விராஜ் நடித்துள்ள 'கலீஃபா' திரைப்படம் ஓணம் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணியில் பிருத்விராஜ் ஈடுபட்டு வருகிறார். Khalifa Posterநேற்றைய தினம் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்வில் பிரு... மேலும் பார்க்க

"நீங்க மம்மூட்டி சாரா? என்னை ஃபாலோ செய்ங்க!" - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழக ரசிகர்!

தமிழ்நாட்டின் காரைக்குடியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் கேரளா திரும்பிக் கொண்டிருந்த மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி வழியறியாமல் தவித்த போது தமிழகத்தைச் சேர்ந்த பாண... மேலும் பார்க்க

"இதை அவர் 12 வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார்!" - நிவின் பாலி வீடியோவை பகிர்ந்த அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு அவரின் காதல் மு... மேலும் பார்க்க

Mohanlal: "ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?" - மகளின் சினிமா அறிமுகம் பற்றி மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துடக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க