செய்திகள் :

Mrunal Thakur: "அதன் பிறகுதான் அனைவரும் என்னை ஏற்றுக்கொண்டார்கள்" - மிருணால் தாகூர்

post image

மிருணால் தாகூர் நடித்திருக்கும் 'டகாய்ட் (Dacoit)' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் அவரை ஏற்றுக்கொண்ட விதம் பற்றி இப்படத்திற்கான புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.

Dacoit - Mrunal Thakur
Dacoit - Mrunal Thakur

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மிருணால் தாகூர், 2018-ல் 'லவ் சோனியா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அதன் பிறகு மூன்று தெலுங்கு படங்களில் நடித்தார். இப்படங்களின் மூலம் பாலிவுட்டைத் தாண்டி மற்ற மொழி சினிமாக்களில் இவர் பெரியளவில் பரிச்சயமானார்.

மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பாலிவுட் இயக்குநர்கள் அவரைப் பல வகையான ரோல்களில் ஏன் காஸ்ட் செய்யவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த மிருணால், "நான் படிப்படியாக ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறேன். முன்பு நான் தயாராக இல்லை.

இப்போது முற்றிலும் தயாராக இருக்கிறேன். எனக்காகவே எழுதப்பட்ட ரோல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

மிருணாள் தாக்கூர் | Mrunal Thakur
மிருணாள் தாக்கூர் | Mrunal Thakur

இயக்குநர்களும் இந்த ஸ்கிரிப்ட்டை உங்களை மனதில் வைத்து எழுதியிருக்கிறேன் எனச் சொல்கிறார்கள். இப்படி சொல்வதெல்லாம் எனக்கு மிகப்பெரிய விருது.

முதல் தெலுங்கு படமான 'சீதா ராமம்' திரைப்படம் பிளாக்பஸ்டராகி, தென்னிந்திய சினிமாவில் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகுதான் அனைவரும் என்னை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வளர்ந்தேன்" எனக் கூறியிருக்கிறார்.

Dhurandhar The Revenge: "ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட.!" - சாடும் திரைக்கதையாசிரியர்!

துரந்தர் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர்... மேலும் பார்க்க

சன்னியாசி வாழ்க்கையைக் கைவிட்ட நடிகை மம்தா குல்கர்னி; டிவி-க்கு திரும்பியவருக்கு ரசிகர்கள் வரவேற்பு

பாலிவுட்டில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மம்தா குல்கர்னி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருந்தார். அவரை கோர்ட் அவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ததைத் தொடர்ந்து வெளிநாட்டில் பதுங்கி இருந்... மேலும் பார்க்க

Dhurandhar The Revenge Review: ஆக்ஷன் த்ரில்லர் போர்வையில் 'மோடி' பிரசார சினிமா; திரையனுபவம் எப்படி?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள லியாரி பகுதியிலிருந்து பாகிஸ்தானின் மொத்த அதிகார மையத்தையும் ஆட்டிப்படைக்கும் கேங்ஸ்டர் கும்பலுக்குள் ஊடுருவி, அதில் ஒவ்வொரு படிநிலையாக உயரும் இந்திய உளவாளியின் கதையைச... மேலும் பார்க்க

காயத்தால் ஆக்‌ஷனுக்கு தற்காலிக `நோ' - பள்ளிகால காதல் சப்ஜெக்ட்டுக்கு திரும்பும் ஷாருக்கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்த கட்டமாக காதல் படத்திற்கு திரும்ப முடிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் பல அதிரடி படங்களில் நடித்த பிறகு, இப்போது உடலுக்கு அதிக சிரமம் தராத ஒரு ஒரு காதல் கதாபாத்தி... மேலும் பார்க்க

"மகாராஷ்டிராவில் இந்தி படங்கள் முதலிடத்தில இருக்கு; ஆனா மராத்தியப் படங்கள்..!"- ரித்தேஷ் தேஷ்முக்

சமீபத்தில் நடைபெற்ற 'Creative Economy Summit' நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், மராத்திய திரைத்துறை இன்று எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். "மகாராஷ்டி... மேலும் பார்க்க

Battle of Galwan `டு' மாத்ருபூமி - சல்மான் கான் நடிக்கும் படத்தின் பெயர் திடீர் மாற்றம்!

நடிகர் சல்மான் கான் நடித்து வரும் படமான பேடில் ஆஃப் கல்வான் படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடை... மேலும் பார்க்க