Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து' ஜோதிடம...
Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவியும் பாராட்டுகள்!
இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது.
இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன.
Electric scenes from Ilaiyaraaja 50: Live concert in Bengaluru last night pic.twitter.com/sr56LAxXWD
— Dr Nandita Iyer (@saffrontrail) January 11, 2026
மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன.
குறிப்பாக புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது.

படித்துக் கொண்டிருக்கும் ஏழைக் குழந்தையருக்கு தினசரி சாப்பாடு வழங்கும் இந்த அமைப்புக்காக இசை மூலம் ஆதரவு திரட்டிய இளையராஜாவின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.



















