செய்திகள் :

National Awards: "விருது கிடைக்காத படங்கள் தகுதியற்றவை அல்ல!" - ஜூரி கணேஷ் பாபு பேட்டி

post image

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட தேசிய விருதுக்கான ஜூரியாக (Non-Feature Films) நடிகர் மற்றும் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு சென்றிருக்கிறார். தேசிய விருதுக்குப் படங்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகின்றன என்பது பற்றி நம்மிடையே அவர் பகிர்ந்துகொண்டார்.

Raayan - 72nd National Awards
Raayan - 72nd National Awards

நம்மிடையே அவர் பேசுகையில், "ஜூரியாக இருந்தது மிகவும் சவாலானதாக இருந்தது. படங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான விஷயம். ஏனெனில், நடுவர் குழுவில் உள்ளவர்களே இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு உணர்வுகள் மற்றும் வெவ்வேறு கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்களாகத்தான் ஒன்றுகூடுகிறோம்.

அப்படிப்பட்ட சூழலில், அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த முடிவை எடுப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஒருமனதாக, ஒத்த கருத்துடைய ஒரு தீர்க்கமான முடிவிற்கு வருவது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.

இதன் காரணமாகவே, சில திரைப்படங்களை நாங்கள் மீண்டும் மீண்டும் கூடப் பார்த்தோம். இந்தத் திரைப்படத்திற்கு இந்தத் தகுதி சரியாக இருக்கிறதா அல்லது அதற்கு அது சரியாகப் பொருந்துகிறதா என்பதை ஆராய்வதற்காகவே பலமுறைத் திரும்பத் திரும்பப் பார்ப்போம். இது முழுமையாக, மிக நேர்மையாக நடைபெற்ற ஒரு நிகழ்வு ஆகும்.

இதில் பல விவாதங்கள் நடந்தாலும்கூட, நாங்களும் படைப்பாளர்களாக இருப்பதன் காரணமாக ஒருவரை ஒருவர் எளிதாகப் புரிந்துகொண்டோம்.

அதுவே முக்கியமான விஷயம். பள்ளி விழா ஒன்றிற்கு முதன்மை விருந்தினராகவோ அல்லது நடுவராகவோ செல்லும்போது, குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் தருணத்தில், 'அந்தக் குழந்தையும் நன்றாகச் செய்தது, இந்தக் குழந்தையும் சிறப்பாகச் செய்தது' என்று எப்படி உற்று நோக்குவோமோ, அதேபோன்ற ஒரு நிலைதான் இதுவும்.

EV Ganesh Babu
EV Ganesh Babu

இதில் முக்கியமாக என்னுடைய கருத்து என்னவென்றால், தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் கொண்டாடப்படுவது ஒருபுறம் இருந்தாலும், இவ்விருதிற்கு விண்ணப்பித்துத் தேர்வாகாத திரைப்படங்கள் தகுதியற்றவை என்று எவ்விதத்திலும் கூற முடியாது.

மிக நுண்ணிய அளவில் ஏதேனும் ஒரு சில புள்ளிகளில் மட்டுமே தேர்விற்கான முன்னுரிமை மாறுபட்டிருக்கலாம். அல்லது, அதே கருத்தை வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த திரைப்படத்தில் இன்னும் வலிமையாகப் பதிவு செய்திருக்கக் கூடும், அவ்வளவுதான்" என்றார்.

Jana Nayagan: "ஜனநாயகனுக்கு 'ஏ' சான்றிதழ் வாங்கியதற்கான காரணம் இதான்" - அ. வினோத் பேட்டி

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறா... மேலும் பார்க்க

Jana Nayagan Exclusive: "நிறைய பேர் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கி... மேலும் பார்க்க

"100 கோடி கொடுத்தாலும் இனி சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன்; ஏன்னா..." - ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் சமீபத்தில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன்... மேலும் பார்க்க

திரைகக்தை மன்னன் கே.பாக்யராஜ் vs நம்ம கே.பாக்யராஜ்! - திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்

மறைந்த நடிகர் பாக்யராஜ் தலைவராக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.2026 -29 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் பெப்சி தலைவர் ஆர்.... மேலும் பார்க்க

"ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தப்போ அதை நினைச்சு விலகியிருந்தால்..." - தேசிய விருது பற்றி சாச்சனா பேட்டி

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் பிரிவில் அனல் அரசுக்கும் ம... மேலும் பார்க்க

Anirudh: "இது முக்கியமான ஒரு மைல்கல்!" - அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து வேடன்

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் 'டிசி' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அருண் மாதேஸ... மேலும் பார்க்க