செய்திகள் :

மார்க்கண்டேயன் கைது: "அவங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" - கீதா ஜீவன்

post image

தூத்துக்குடியில் கடந்த 18 ஆம் தேதி தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது, "சட்டமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் உன் அப்பாவை என்று சொல்கிறானே, நான் கேட்கிறேன்.. மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் (விஜய்), உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறோம்.

மார்க்கண்டேயன்
மார்க்கண்டேயன்

நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? சட்டமன்றத்தைக் கூட்டும்போது உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து விட்டுதான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தைக் கூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து கேராவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்?" என்று பேசியிருந்தார்.

முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதால் விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் மார்க்கண்டேயன் கைது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஆதவ் அர்ஜுனா கூடத்தான் எங்கள் முதல்வரை முட்டாள் என்று விமர்சித்திருந்தார். நாங்கள் கைது செய்தோமா?

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

கரூரில் 42 உயிர்கள் பறிபோனபோது விமான நிலையத்தை நோக்கி விஜய் ஓடினாரே அப்போது நாங்கள் கைது செய்தோமா? மார்க்கண்டேயன் சாதாரணமாக பொதுக்கூட்டத்தில் பேசியதை விசாரிக்காமல், எந்த முன் அறிவிப்புமின்றி கைது செய்திருக்கிறார்கள்.

இது நாடா? காடா? இது ரொம்ப நாள் நீடிக்காது. அதிகபட்சம் நான்கு மாதங்கள் இந்த ஆட்சி இருக்கும்" என்றார். தொடர்ந்து பேசிய கீதா ஜீவன், "தவறு செய்யும் தவெக நிர்வாகிகளைக் கைது செய்ய மறுக்கிறார்கள். அவர்களுக்கு வந்தால் ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன?

போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். நேற்று தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வேறு தொடங்கியது. நாடாளு... மேலும் பார்க்க

CJP: ``நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு" - சு. வெங்கடேசன்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடு... மேலும் பார்க்க

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' - முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

'சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்' என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.திமுகவில் ஏற்கனவே வெற்... மேலும் பார்க்க

CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்... மேலும் பார்க்க

CJP: மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்த சிஜேபி அமைப்பினர் - கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்ட... மேலும் பார்க்க

`பாஜக-வை கோபப்படுத்தாத நாடாளுமன்ற அரசியலை நோக்கி.!' - திமுக, பாஜக கைகோர்க்குமா?

தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அந்தவகையில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க