செய்திகள் :

Neelira: "போரை விரும்பாதவர்களுக்கான படம் இது.!"- நீளிரா படத்தை பாராட்டிய சூர்யா

post image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்து தயாரித்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இலங்கையின் போர் பதற்ற சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சோமிதரன் இயக்கியிருக்கிறார்.

நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நீளிரா
நீளிரா

இந்நிலையில் இப்படத்தைப் பாராட்டி நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், " 'நீளிரா' என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம்.

இப்போது நடந்துகொண்டிருக்கும் போராலேயே நம் அன்றாட வாழ்வுகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

அதில் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது இன்னும் சாதாரண மக்கள் தான். ஒரு போர் சூழலில் கல்யாணம் நடக்கிறது.

அந்த இரவை எப்படி கடந்து வருகிறார்கள். எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை வைத்து ஒரு எமோஷனல் த்ரில்லராக இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது.

அந்த இரவை உணர்ந்தவரே இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். கடந்த காலப்போர் இப்போது இருக்கும் நிலைமை எல்லாவற்றிற்கும் இந்தப் படம் ஒரு மௌன சாட்சியாக எல்லார் மனதிலும் நிலைத்து நிற்கும்.

சூர்யா
சூர்யா

போரை விரும்பாதவர்களுக்கான படம் தான் இது. தமிழ் சினிமாவில் போர் தொடர்பான நிறையப் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இது ரொம்ப ரொம்ப புதிதாக இருக்கும்.

எனக்கு இந்தப் படம் ரொம்ப பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். 'நீளிரா' படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று படத்தை பாராட்டி இருக்கிறார்.

காளிதாஸ் 2 விமர்சனம்: காணாமல் போகும் குழந்தை; த்ரில் சேர்க்கிறதா இந்த பரபர போலீஸ் விசாரணை?

சென்னை பெருநகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூன்று வயதேயான பெண் குழந்தை ஒன்று காணாமல் போகிறது. குழந்தையின் தாய் சஞ்சு (அபர்ணதி), அபார்ட்மென்ட் செகரட்டரி ரூபா சு... மேலும் பார்க்க

நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!

1988-ல் இலங்கை வடக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் போர்ச் சூழலுக்கிடையில் வசித்து வருகிறார் வாசுகி (கபிலா வேணு). அடுத்த நாள் அவரின் மகளின் (சிது குமரேசன்) திருமணம் நடக்கவுள்ளதால், முதல் நாள் சொந்தங்... மேலும் பார்க்க

``இந்த முறை தனிமையுடன் நான் நிஜமாகவே போராடினேன்" - நடிகை மாளவிகா மோகனன் எமோஷ்னல் பதிவு!

மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது இயக்குநர் தியாகராஜான் குமாரராஜா இயக்கத்தில் பாட்கெட் நாவல் திரைப்பத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைபடத்தி... மேலும் பார்க்க