செய்திகள் :

Nepal Flood: "மக்களை அழைத்து வருவதே எங்களின் முதல் இலக்கு!'' - மீட்பு பணிகள் குறித்து வெங்கட நாராயணா

post image

நேபாளத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகளும் அங்குப் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

நேபாளம் வெள்ளம்
நேபாளம் வெள்ளம்

நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து தமிழக அரசின் புதுடெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட் நாராயணா பேட்டியளித்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "கைலாஷ் யாத்திரை மற்றும் சூப்பர் யாத்திரைக்காகத் தமிழகத்திலிருந்து சுமார் 380 முதல் 390 பயணிகள் வரை நேபாளத்திற்குச் சென்றுள்ளனர்.

இதில் முதற்கட்டமாக 148 பேர் கொண்ட ஒரு குழு பாதுகாப்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நாளைத் தமிழகம் திரும்புவார்கள். மேலும் 39 பேர் கொண்ட மற்றொரு குழுவினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் ஏற்கனவே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

வெங்கட நாராயணா
வெங்கட நாராயணா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்து வருகிறோம்.

இன்னும் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கும் 49 பேரைக் கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே போதுமான அளவு தமிழ் பேசும் அதிகாரிகள் மீட்புக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருமுறை மீட்பு நடவடிக்கைகள் குறித்துத் தகவல்களைப் பெற்று வருகிறோம். மாயமான நமது மக்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதே எங்களின் முதல் இலக்கு" எனப் பேசியிருக்கிறார்.

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது... கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிப... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று த... மேலும் பார்க்க

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க