செய்திகள் :

NHAI: விரைவில் 3 மணி நேரத்தில் சென்னை டு திருச்சி - ரூ20,000 கோடியில் உருவாகிறது புதிய விரைவுச்சாலை!

post image

இன்னும் சில ஆண்டுகளில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லும் வகையில், 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பசுமைவழி விரைவுச்சாலை திட்டப் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது. ரூ.20,000 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம், சென்னை - பெங்களூரு (NE-7) விரைவுச்சாலைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது தேசிய விரைவுச்சாலையாக அமையவுள்ளது. இந்தச் சாலையில் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.

சமீபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று, இரு நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்த இத்திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நெடுஞ்சாலை
நெடுஞ்சாலை

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் எம்.எஸ்.சைதன்யா கூறுகையில், ``நிலம் கையகப்படுத்துதல், சாலை சீரமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் தொடர்பாக மாநில அரசு நிறுவனங்களுடன் முதற்கட்ட ஆலோசனைகளை அண்மையில் நடத்தியுள்ளோம்.

தற்போது 5 முதல் 6 மணி நேரமாக உள்ள பயண நேரத்தை இத்திட்டம் 3 மணி நேரமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பரனூர் முதல் செங்கல்பட்டு வரையிலான நான்கு வழிச்சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக, செங்கல்பட்டை கடப்பதற்கே வாகனங்களுக்குப் பொதுவாக இரண்டு மணி நேரம் வரை ஆகிறது.

மாநில சுற்றுச்சூழல், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்த ஆரம்பக்கட்ட வடிவமைப்பின்படி, இந்த கட்டுப்பாடான அணுகல் கொண்ட விரைவுச்சாலை வழித்தடம் 12 மாவட்டங்கள் வழியே நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளைக் கொண்டிருக்கும். இந்த மூடிய வழித்தடம் சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலையின் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொடங்கும். பின்னர் தற்போதுள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் இந்த விரைவுச்சாலை அமையும். மேலும், இந்த திட்டத்துக்காக மாவட்டங்களுக்கு இடையே 90 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியிருக்கும்." என்றார்.

NHAI
NHAI

மேலும், இந்த திட்டம் குறித்து பேசிய அதிகாரிகள், ``இது ஒரு பசுமைவழித் திட்டம் என்பதால், பாதையின் சில பகுதிகள் காடுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் வழியே செல்வதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதே இதில் உள்ள முக்கிய சவாலாக இருக்கும். இருப்பினும், மாநில அரசு இதற்கு முன்னுரிமை அளித்து தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. காகிதப் பணிகள் மற்றும் சட்டரீதியான நடைமுறைகள் ஓராண்டிற்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக காவிரியின் குறுக்கே புதிய பாலம் ஒன்றும் கட்டப்படவுள்ளது." என்றனர்.

வார இறுதி நாட்களில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அதிகளவிலான தனியார் வாகனங்கள் பயணிப்பதால் இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்... மேலும் பார்க்க

’தில்லுமுல்லு அம்பலம்; எந்த எல்லைக்கும் செல்ல திமுக தலைமை தயாராகிவிட்டது!’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார. அவர் இது குறித்து பேசுகையில், “ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த ஆதர... மேலும் பார்க்க

``ஆத்திரத்தில் அதிமுக-வை உடைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது தவெக!" - அப்பாவு சொல்வது என்ன?

சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெக ஆதரவு அதிமுக அணி ஒன்று உருவானது. அந்த அணியை முதல்வர் விஜய் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக பிரிந்து, பின் இணைந்தது. ஆனால், எடப்பாடி மீது அதிருப்... மேலும் பார்க்க

'பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா?'- ஆளுநரின் `வைகை' பேச்சுக்கு அமைச்சர் வன்னிஅரசு கண்டனம்

நேற்று (ஜூலை.2) மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர் வைகை ஆற்றை பற்றி பேசியதும், ஆலோசனை கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் இந்த செயலுக... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் காவல்துறை? - இதுவரை நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக வெளியான த... மேலும் பார்க்க