செய்திகள் :

செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் காவல்துறை? - இதுவரை நடந்தது என்ன?

post image

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவை அணுகிய சிலர், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசியுள்ளனர். இதற்கு உடன்படாத எம்.எல்.ஏ, கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் ஜூன் 29-ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். திருவல்லிக்கேணி காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

செந்தில் பாலாஜி

விசாரணையின் அடிப்படையில், 'ஐபிடிஎஸ்' நிறுவனத்தை நடத்தும் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய 3 பேர் முதற்கட்டமாகக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் சீனிவாசன், செல்வன், குரோம்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கரூரில் பிடிபட்ட கார்த்திக், ரமேஷ் என மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

விசாரணையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், சென்னையில் நரேஷைச் சந்தித்துள்ளதும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் அறிவுரையின் பேரிலேயே இந்த ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதும் தெரியவந்துள்ளது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

இதையடுத்து, இந்த வழக்கில் அசோக்குமார் சேர்க்கப்பட்டு, அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள அசோக்குமார் மற்றும் இந்தச் சதியின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்கிற தகவலும் தற்போது அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

'பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா?'- ஆளுநரின் `வைகை' பேச்சுக்கு அமைச்சர் வன்னிஅரசு கண்டனம்

நேற்று (ஜூலை.2) மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர் வைகை ஆற்றை பற்றி பேசியதும், ஆலோசனை கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் இந்த செயலுக... மேலும் பார்க்க

NHAI: விரைவில் 3 மணி நேரத்தில் சென்னை டு திருச்சி - ரூ20,000 கோடியில் உருவாகிறது புதிய விரைவுச்சாலை!

இன்னும் சில ஆண்டுகளில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லும் வகையில், 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பசுமைவழி விரைவுச்சாலை திட்டப் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI... மேலும் பார்க்க

பென்னாகரம் MLA-வை புறக்கணித்து மாவட்டச் செயலாளர் நடத்திய அரசு நிகழ்ச்சி; தருமபுரி தவெக-வில் பரபரப்பு

புதிய பேருந்து வழித்தட தொடக்கவிழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ-வை அழைக்காமல் மாவட்டச் செயலாளரே தலைமையேற்று தொடங்கி வைத்தது தருமபுரி மாவட்ட தவெக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கஜேந்திரன் எம்.எல்.ஏதருமபுரி ம... மேலும் பார்க்க

"கர்நாடகா முதல்வரிடம் பேசி மேகதாது திட்டத்தை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்" - சொல்கிறார் அன்புமணி

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட கர்நாடக அரசை வலியுறுத்தி ஒகேனக்கலில் தொடங்கி பூம்புகார் வரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி பரப்புரை பயணம் சென்று கொண்டிருக்கிறார்.பரப்புரை விளக்க பிரசுரம... மேலும் பார்க்க

"சந்தேகம் இருந்தால் ஆர்.என் இரவியிடம் கேட்டுப்பாருங்கள்" - ஆளுநரைக் கண்டித்த எம்.பி சு.வெங்கடேசன்

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசும் போது, “மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே... மேலும் பார்க்க