செய்திகள் :

Parasakthi: "'சூரரைப் போற்று' கதையை படிச்சிட்டு நான் சரியில்லைனு சொன்னதாக..." - சிவகார்த்திகேயன்

post image

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஶ்ரீலீலா, அதர்வா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பராசக்தி
பராசக்தி

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன், அதர்வா, ஶ்ரீலீலா, இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து ரவுண்ட் டேபிள் நேர்காணல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த நேர்காணலில் 'மாநாடு' திரைப்படத்தின் கதை தனக்கு வந்ததாக சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பேசுகையில், "'சூரரைப் போற்று' கதையைப் படிச்சிட்டு நான் சரியில்லைனு சொன்னதாக சுதா மேடமுக்கு ஒரு தகவல் போயிருக்கு.

என்கிட்ட ஸ்கிரிப்ட் கொடுத்ததாக சுதா மேமுக்கும் தகவல் போயிருக்கு. ஆனா, அந்த ஸ்கிரிப்ட் என்கிட்ட வந்து சேரவே இல்லை." என்றதும் இயக்குநர் சுதா கொங்கரா, "அதெல்லாம் சும்மா சொல்றாருங்க!

அந்தக் கதையை அவர் படிச்சிட்டு 'இது கஜினி மாதிரியான ஸ்கிரிப்ட்'னு சொன்னதாக தகவல் வந்துச்சு. 'கஜினி' மாதிரியான ஸ்கிரிப்ட்னா இதை அவர் பண்ணனும்தானேனு தோணுச்சு." என்றார்.

மேலும் பேசிய சிவகார்த்திகேயன், "'சிம்பு சாரை வச்சு முதல்ல 'மாநாடு' படத்தை எடுத்து நிறுத்தியிருந்தாங்க. அப்போ என்னை வச்சு அந்தப் படத்தைப் பண்ணச் சொன்னாங்க.

இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும். அவரை வச்சே கண்டின்யூ பண்ணுங்கனு சொன்னேன். இதை அவரை வச்சு தொடங்கியாச்சு. இதை ஆரம்பிக்கலைனா, நம்ம டிஸ்கஸ் பண்ணியிருக்கலாம்.

நம்ம நெக்ஸ்ட் ஒரு படம் பண்ணலாம்னுங்கிறதுதான் ப்ளான். அது போல, சுதா மேம் கொடுத்த கதை பிடிக்கலைனாலும், ஏன் பிடிக்கலைனு சொல்லியிருப்பேனே! எனக்கு அந்த ரீச் ஆகவே இல்லை." எனக் கூறினார்.

வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!

மாசிலா என்ற கற்பனை நகரத்தில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார் ராஜ் கிரண். எம். ஜி.ஆர் மறைந்த அதே நேரத்தில் அவருக்கு பேரன் (கார்த்தி) பிறக்கிறான். பேரனுக்கு ராமேஸ்வரன் எனப் பெயர் வைத்து, நேர்மைய... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: அல்லு அர்ஜூனை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால், ல... மேலும் பார்க்க

மோடியுடன் பொங்கல் விழா : `ஜனநாயகன் எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான்' - சிவகார்த்த்திகேயன்

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். 'ஒர... மேலும் பார்க்க

Parasakthi: "அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க!" - கலங்கும் 'பராசக்தி' அய்யாகண்ணு

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' கடந்த வாரம் திரைக்கு வந்தது. மொழிப் போர் பற்றிய இத்திரைப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் நடிப்பில் கச்சிதமான பக்கங்களைக் காட்டியிருந்தார்கள். முதன்மை கதாபா... மேலும் பார்க்க