செய்திகள் :

Lokesh Kanagaraj: அல்லு அர்ஜூனை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

post image

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கி இருந்தார்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால், லோகேஷ் கனகராஜ் தற்போது அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி
ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், " உங்களுடன் இந்தப் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அல்லு அர்ஜூன் சார். இதைக் கோலாகலமான, மிகப் பெரிய வெற்றியாக மாற்றுவோம்.

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்

மீண்டும் ஒரு முறை எனது சகோதரர் அனிருத்துடன் இணைகிறேன்" என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!

மாசிலா என்ற கற்பனை நகரத்தில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார் ராஜ் கிரண். எம். ஜி.ஆர் மறைந்த அதே நேரத்தில் அவருக்கு பேரன் (கார்த்தி) பிறக்கிறான். பேரனுக்கு ராமேஸ்வரன் எனப் பெயர் வைத்து, நேர்மைய... மேலும் பார்க்க

மோடியுடன் பொங்கல் விழா : `ஜனநாயகன் எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான்' - சிவகார்த்த்திகேயன்

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். 'ஒர... மேலும் பார்க்க

Parasakthi: "அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க!" - கலங்கும் 'பராசக்தி' அய்யாகண்ணு

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' கடந்த வாரம் திரைக்கு வந்தது. மொழிப் போர் பற்றிய இத்திரைப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் நடிப்பில் கச்சிதமான பக்கங்களைக் காட்டியிருந்தார்கள். முதன்மை கதாபா... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா - பிரதமருடன் 'பராசக்தி' படக்குழு பங்கேற்பு!

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார்.பிரதம... மேலும் பார்க்க

பராசக்தி: ”அவதூறு பரப்புறாங்க; ரசிகர்களின் ரவுடித்தனம்.!” - சுதா கொங்கரா ஆதங்கம்

'பராசக்தி' படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்திருக்கிறார். பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாக ... மேலும் பார்க்க