'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' - சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!
அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இயங்கி வரும் புனித தாமஸ் பள்ளியின் 50- வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நபர்களை சிறப்பு விருந்தினர்களாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அழைத்துள்ளனர். மேற்கூரையற்ற திறந்தவெளி மேடை என்பதால் நேற்று பெய்த மழையின் போது அனைவரும் நனையும் நிலை ஏற்பட்டது.

மழையில் நனைந்தபடியே ராகுல் காந்தியும் உரை நிகழ்த்தினார். இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க- வின் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா மற்றும் அ.தி.மு. க-வைச் சேர்ந்த கூடலூர் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் ஆகிய இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்துள்ளனர். மழை அதிகரித்த நேரத்தில் தான் வைத்திருந்த போர்வையை அருகில் இருந்த எம்.எல்.ஏ பொன். ஜெயசீலனுடன் பகிர்ந்துள்ளார். எதிரெதிர் கட்சியில் பயணிக்கும் இருவரும் மழைக்கு ஒரே போர்வையை பகிர்ந்து கொண்ட செயல் கவனத்தை ஈர்த்து வருகிறது.


















