நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
Parasakthi: " 'பராசக்தி' திரைப்படம் எங்களுக்கும், சினிமாவுக்கும் ஒரு மைல்கல்!" - ரவி மோகன்
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்திருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம் இது.

இப்படத்தின் கதை பேசும் விஷயங்களை மையமாக வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செட் அமைத்திருக்கிறார்கள்.
இதன் அறிமுக விழா இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றிய சுவாரசியங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
ரவி மோகன் பேசுகையில், "இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு போகும்போது எனக்கு சில எண்ணங்கள் இருந்தது. அங்க போனதும் எனக்கிருந்த எண்ணங்களெல்லாம் மறைந்துடுச்சு.
ஏன்னா, என்னை அங்க அப்படி பார்த்துக்கிட்டாங்க. அந்த சூழலுக்கேற்ப என்னை சுதா மேம் தயார்படுத்தினாங்க.

இந்தப் படத்துல அதர்வா லட்டு மாதிரி இருப்பாரு. யாரா இருந்தாலும் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுடுவோம். சிவாவின் 25-வது படத்தில் நான் நடிச்சிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
ஸ்ரீ லீலாவுக்கு இந்தப் படம் நடிகராக பெயர் வாங்கித் தரும். இந்தப் படம் எங்களுக்கும், சினிமாவுக்கும் ஒரு மைல்கல் திரைப்படமாக அமையும்." எனப் பேசினார்.



















