கிளாம்பாக்கம்: சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் புறப்படும் மக்கள்; KCBT ஸ்பாட...
Parasakthi: "'வெரி போல்ட் மூவி'னு ரஜினி சார் சொன்ன விஷ்; 5 நிமிடம் பாராட்டிய கமல் சார்!" - எஸ்.கே
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுக திரைப்படம் இதுதான்.

அதைத் தாண்டி அதர்வா, சேத்தன், குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
நடிகர்களைத் தாண்டி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கும் இத்திரைப்படம் ஒரு மைல்கல்.
ஆம், இது அவர் இசையமைக்கும் 100-வது திரைப்படம். இத்திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், "இந்த படத்துக்காக நன்றி சொல்வதற்கு நிறையவே காரணம் இருக்கு. சுதா மேம் இந்த கதையைச் சொல்லும் போதே நான் இன்ஸ்பயரிங்கா ஃபீல் பண்ணேன்.
ஒரு நடிகனாக பார்க்கும்போது இந்தப் படத்துல எனக்கு நிறைய ஸ்பேஸ் இருந்தது.
என்னை மேம்படுத்திக்க இந்தக் கதையில நிறைய விஷயங்கள் இருந்தது." என்றவர், "இந்த கதையை சினிமாவாக மாத்துறது ரொம்ப கஷ்டம். ஏன்னா, உண்மை சம்பவங்களை அடிப்படையாக வச்சு சினிமாவாக பண்ணனும்.

அதே சமயம், இதுல வணிகம் இருக்கு. கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து பேலன்ஸ் பண்ணனும். ஜென் சி படத்தைப் பார்க்கும்போது அவங்க படத்தோட ஒண்ணா பார்க்கணும்னு நினைச்சோம்.
சுதா மேம் காலையில 4 மணிக்கு எழுந்து ஷூட்டிங் வர்ற விஷயங்கள் பற்றி சொன்னாங்க. அதுல கஷ்டங்கள் இருக்காது. ஏன்னா, அது தானே வேலை. படம் பார்த்துட்டு ராதிகா மேம் விஷ் பண்ணினாங்க.
'ஒவ்வொரு படத்துலயும் உங்களை இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கீங்க'னு அவங்க சொன்னாங்க. ரிலீஸுக்கு முந்தைய நாள் கமல் சார் படத்தைப் பார்த்துட்டு பாராட்டினார். படத்தைப் பற்றி ஐந்து நிமிடங்கள் என்கிட்ட பேசிட்டிருந்தார்.
அவர் 'அமரன்' படத்துக்குக்கூட அவ்வளவு விஷயங்கள் பேசல. நேத்து ரஜினி சார் கால் பண்ணி 'வெரி போல்ட் மூவி. அற்புதமாக நடிச்சிருக்கீங்க'னு விஷ் பண்ணாரு." எனப் பேசினார்.
படங்கள் - ராகுல். செ















