நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
Parasakthi: 'சோதனையை சந்திச்சாதான் சாதனை'னு நம்ம தலைவர் சொல்ற மாதிரி!" - சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்திருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம் இது.

இப்படத்தின் கதை பேசும் விஷயங்களை மையமாக வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செட் அமைத்திருக்கிறார்கள்.
இதன் அறிமுக விழா இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றிய சுவாரசியங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், "1960-களில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி, இந்தக் கதையை சுதா மேம் அமைத்திருக்காங்க. இந்தப் படத்தை செய்வதற்கான முதல் காரணமே சுதா மேம்தான்.
அவங்களோட ஒரு படத்தை செய்ய முடிவெடுத்ததுக்குப் பிறகுதான் இந்தக் கதையை நான் கேட்டேன்.
இந்தக் கதையை நான் கேட்டதுக்குப் பிறகு நான் படத்துக்காக எந்த ஆராய்ச்சியும் செய்ய தேவையில்லைனு தோணுச்சு. ஏன்னா, சுதா மேம் கிட்டத்தட்ட இந்த கதையில ஒரு டிகிரியே முடிச்சிருக்காங்க.

அவங்க சொல்றதை செய்தால் போதும்னு இருந்தோம். இந்தப் படத்தின் கேரக்டர்களில் நடிக்கிறது கொஞ்சம் சவால். அந்த சவாலை நாங்க அனைவரும் ஏத்துக்கிறதுக்கு தயாராக இருந்தோம்.
'சோதனையை சந்திச்சாதான் சாதனை'னு நம்ம தலைவர் சொல்ற மாதிரி, இந்தப் படம் அப்படியான ஒரு சாதனையாகதான் இருக்கும்னு நான் நம்புறேன். அவ்வளவு விஷயங்களை நாங்க கடந்து வந்திருக்கோம்.
எனக்கும் அதர்வா ப்ரோவுக்கும் சாப்பாட்டுலதான் கனெக்ஷன். என்னை ஸ்வீட் சாப்பிட வச்சிட்டு பிறகு அவர் மட்டும் வொர்க் அவுட் செய்திடுவாரு.
நான் 'அது இது எது' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது, அதர்வா ப்ரதர் அவருடைய முதல் படத்தின் ப்ரோமோஷனுக்கு முரளி சாரோட வந்திருந்தாரு.
இன்னைக்கு அவருடன் இணைந்து நான் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. பெர்பார்மன்ஸைத் தாண்டி முயற்சி இருந்தால் தமிழ் ரசிகர்கள் மேல கொண்டு போய் உட்கார வச்சிடுவாங்க.
அப்படி வந்தவன்தான் நான். ஹீரோவாக இத்தனை ஆண்டுகள் நடிச்சப் பிறகு வில்லனாக நடிக்கிற முடிவை எடுப்பது கொஞ்சம் சவாலான விஷயம்.

அவர் இந்தப் படத்துக்குதான் வில்லன். எனக்கு எப்போதுமே நான் காலேஜ்ல பார்த்து வியந்த ஹீரோதான்! இங்க இருக்கிறதுலேயே சீனியர் அவர்தான். அதனால்தான் அவருடைய பெயர் முதல்ல இருக்கும்.
இந்த மாதிரியான படக்குழு, இந்தப் படத்தின் டைட்டில் எல்லாமே கிடைத்திருப்பது அந்த பராசக்தியின் அருள்தான்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பிரச்னையைப் பேசும்.
அதுக்கூடவே காதல், வீரம், பாசம், புரட்சினு எல்லாம் பேசுகிற படமாக இருக்கும். இந்தப் பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி நல்ல கொண்டாட்டமாக இருக்கும்." எனப் பேசினார்.



















