செய்திகள் :

PM SHRI திட்டம்: ``தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" - அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

post image

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்தது. தற்போது தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி, தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக அர்த்தமாகும் என்பதால், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

PM Shri

மேற்கு வங்க தேர்தல் முடிவில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு தேசியக் கல்விக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதால், இந்த அரசு என்ன முடிவுகளை முன்வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கூடுதல் கவனம் பெற்றது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ``தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது எங்கள் அரசின் கொள்கைகளில் அடிப்படையானது. நம்முடைய இரு மொழிக்கொள்கையில் அவரவரின் தாய்மொழி மிக முக்கியம்.

உறவுகளிடம் பேச தாய் மொழியும், உலகிடம் பேசுவதற்கு ஆங்கிலமும் போதும். அடுத்தடுத்தக் கூட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கிறோம். இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். நம் பள்ளிக் கல்வித்துறைக்கென ஓர் இலக்கு இருக்கிறது. அதன்படி என்னென்னவெல்லாம் இந்த துறைக்கு வழங்கமுடியுமோ... அத்தனையையும் சிறப்பாக ஆலோசனைகளுக்குப் பிறகு செய்வோம் " எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மதுரை : 'ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்' – காரணம் என்ன?

தமிழ்நாட்டில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும், மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே... மேலும் பார்க்க

தொழில்துறைக்கு மட்டும் தானா, அப்போ முதலீட்டிற்கு? வெள்ளி இறக்குமதியில் 'கட்டுப்பாடு' விதித்த இந்தியா

இன்னும் 100 டாலர்களுக்கு மேல் தான் கச்சா எண்ணெய் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் எண்ணெய் இறக்குமதிகள் தடைப்படாமல் இருக்க, அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "3வது, 4வது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.30 ஆயிரம் சன்மானம்" - முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். தற்போது 3வது மற்றும் 4வது குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கும்... மேலும் பார்க்க

வித்யாஷ்ரம் பள்ளியில் நிர்வாக பிரச்னை; இடைக்கால நிர்வாகியாக விஜய்குமார் ரெட்டி - நீதிமன்றம் தீர்ப்பு

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நடத்தி வரும் குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிர்வகிக்க புதிய நிர்வாகி ஒருவரை நியமித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த மே 2-ம் தேதி, அந்தப... மேலும் பார்க்க

இனி PF கிளைம் செய்தால் போதும்; 3 நாள்களில் வங்கிக் கணக்கில் தானாக பணம் வந்து விடும்!

தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அனைவருக்கும் ஓய்வுக்காலத்தில் பெரியளவில் கைக்கொடுப்பது - பி.எஃப் பணம். சில நேரங்களில், பணியில் இருக்கும் போதே, அவசரக் காரணங்களுக்காக பி.எஃப் பணம் கிளைம் செய்யப்படும். ... மேலும் பார்க்க

மின் கட்டணம்: ``இதைப் பின்பற்றி செயல்படுத்துங்கள்..!"- அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!

தவெக அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் முந்தைய திட... மேலும் பார்க்க