செய்திகள் :

இனி PF கிளைம் செய்தால் போதும்; 3 நாள்களில் வங்கிக் கணக்கில் தானாக பணம் வந்து விடும்!

post image

தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அனைவருக்கும் ஓய்வுக்காலத்தில் பெரியளவில் கைக்கொடுப்பது - பி.எஃப் பணம்.

சில நேரங்களில், பணியில் இருக்கும் போதே, அவசரக் காரணங்களுக்காக பி.எஃப் பணம் கிளைம் செய்யப்படும்.

இந்த இரண்டில் என்ன காரணமாக இருந்தாலும், பி.எஃப் பணத்தைப் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல.

விண்ணப்பங்கள்... சரிபார்ப்புகள்... கால தாமதங்கள்... அலைச்சல்களுக்குப் பிறகு தான், பி.எஃப் பணத்தை பெற முடியும். ஆனால், இனி இதெல்லாம் இருக்காது.

இந்த நடைமுறைகள் எளிதாக்கப்பட உள்ளன என்று மத்திய பிஎஃப் ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

பி.எஃப்
பி.எஃப்

அவரது கூற்றின் படி, இனி ரூ.5 லட்சம் வரையிலான பி.எஃப் கிளைம்கள் 'ஆட்டோ செட்டில்மென்ட்' அடிப்படையில் செட்டில் செய்யப்படும்.

அதாவது, பி.எஃப் கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் வரையில் கிளைம் செய்தால், சரிபார்ப்பு... கால தாமதம் எல்லாம் இல்லாமல், வங்கிக் கணக்கில் தானாக செட்டில் செய்யப்பட்டு விடுமாம்.

அதுவும் கிளைம் செய்த மூன்று நாள்களுக்குள் பணம் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நடைமுறையால் 7 கோடி பேர் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மின் கட்டணம்: ``இதைப் பின்பற்றி செயல்படுத்துங்கள்..!"- அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!

தவெக அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் முந்தைய திட... மேலும் பார்க்க

'ஆயிரம் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் பணம்' இந்திய ரூபாய் மதிப்பு ரூ.96-க்கு சரிவு!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது. இந்தச் சரிவைத் தடுக்க, அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது அவ்வளவாக கைக்கொடு... மேலும் பார்க்க

'எடப்பாடிக்கு எதிராகவே `அதிமுக அதிகாரப்பூர்வ' ஊடகங்கள் திரும்பியது எப்படி?

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடும், தொலைக்காட்சியும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியதோடு த.வெ.க ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு துண... மேலும் பார்க்க

பெட்ரோல் விலையேற்றம்: `விலைவாசி உயர்வு முதல் ஹைப்ரிட் வாகனம் வரை'- சிக்கல்களை விளக்கும் கே.பி.முரளி!

மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளன. இந்த வில... மேலும் பார்க்க

குழந்தை பெற கைதிக்கு பரோல் கேட்ட மனைவி: `குழந்தை களங்கத்தை சுமக்க நேரிடும்'- நீதிபதிகள் கருத்து

சிவகங்கை மாவட்​டம் திருப்​பாச்​சேத்தி பகு​தி​யைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில," என் கணவர் மதுரை மத்​திய சிறை​யில் ஆயுள் தண்​டனை கைதி​யாக உள்​ளார். என் கணவர... மேலும் பார்க்க

Petrol Price Hike: நாடு முழுவதும் உயர்ந்த பெட்ரோல், டீசல், CNG விலை; சாமானிய மக்கள் கலவை

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் நேரடி விளைவாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ... மேலும் பார்க்க