செய்திகள் :

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" - நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

post image

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது.

தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு 'ரஞ்சன்' என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், 'அந்தகன்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார்.

Court, State Vs Nobody Tamil Movie
Court, State Vs Nobody Tamil Movie

பிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயாணியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகை தேவயாணி, "முதல்ல தியாகராஜன் சாருக்கு ரொம்ப நன்றி. இன்னொரு தலைமுறை நடிக்க வர்றாங்க.

புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது மிகச் சிறப்பான விஷயம். அது அவர்களுடைய எதிர்காலத்தை செதுக்கும். அதுல என்னுடைய மகள் ப்ரியங்கா ராஜகுமாரனையும், ஹரி கதிரேசன் என்பவரையும் அறிமுகப்படுத்துறாங்க.

 Devayani
Devayani

புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது என்பது அவங்களுக்கு லைஃப் கொடுக்கிற மாதிரியானது. கண்டிப்பாக இவங்க உங்களுடைய பெயரைக் காப்பாற்றுவாங்க.

நிச்சயமாக, நிறைய கடின உழைப்பையும் தருவாங்க." என்றவர், '''அப்பு' படத்துல நடிக்கும்போது, என்னுடைய மகளும் பிரசாந்தும் இணைந்து நடிப்பாங்கனு நான் நினைச்சுக்கூட பார்க்கல." எனப் பேசினார்.

ko 15: "உங்களின் முதல் தொலைபேசி அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது..!"- கே.வி.ஆனந்த் குறித்து ஜீவா

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'கோ'. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் ரிலீஸாகி இன்றுடன் 15... மேலும் பார்க்க

"அவர் பாடகர்னுகூட தெரியாது; அதனால என் பசங்க படிப்பும் நின்னுடுச்சு!" - கலங்கும் ரிச்சர்ட் மனைவி

பின்னணிப் பாடகர் ரிச்சர்ட் அலிசன் நாதன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுச் சிரமங்களைச் சந்தித்து வரும் அவருடைய குடும்பத்தினருக்குச் சமீபத்தில் கே.பி.ஒய் பாலா உதவி செய்... மேலும் பார்க்க

"நான் ஹீரோவாக அறிமுகமாகிறேனா?" - விளக்கமளிக்கும் சாய் அபயங்கர்

தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான். சூர்யாவின் 'கருப்பு', அல்லு அர்ஜுனின் 'ராக்கா' எனப் பல பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர். இதில், சூ... மேலும் பார்க்க

விஜய்: "இது ஒரு மாற்றம், ஒரு எழுச்சி, ஒரு மௌனப் புரட்சி" - எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட காணொளி

ஏப்ரல் 23-ம் தேதி, வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது. இன்று மாலையோடு பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைகின்றன. விஜய்யின் தவெக-வும் முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. விஜய்க்கு ஆதரவாக நடிகர்கள் பலரும் பிரச... மேலும் பார்க்க

"அதில் ரஹ்மான் சாருக்கு எந்த தயக்கமும் இல்லை!" - 'கருப்பு' பற்றி சாய் அபயங்கர்

தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான். சூர்யாவின் 'கருப்பு', அல்லு அர்ஜுனின் 'ராக்கா' எனப் பல பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர். இதில், சூ... மேலும் பார்க்க