செய்திகள் :

Premalu: தயாராகும் 'ப்ரேமலு' இந்தி ரீமேக்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்! - மாற்றப்பட்ட விஷயங்கள் என்ன?

post image

பாலிவுட் தற்போது மற்றுமொரு ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறது. இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் வெளியான 'ப்ரேமலு' திரைப்படம் சென்சேஷனல் ஹிட் ஆகியிருந்தது.

Prem Keetanu Movie
Prem Keetanu Movie

'ஜென்-ஜி'களின் கதையை, 'ஜென்-ஜி'களுக்காகக் குறிவைத்து எடுக்கப்பட்டிருந்தது அந்தப் படம்.

இந்தப் படம் 2024-ம் ஆண்டு வெளியாகி, அந்த ஆண்டின் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றது.

இப்படியான பெரிய ஹிட் படங்களைக் கண்டதும், பாலிவுட் செய்யும் விஷயம் ரீமேக்தான். ஆனால், சில நேரங்களில் பாலிவுட் செய்த ரீமேக்குகள் வெற்றிப் படங்களாகவும் மாறியிருக்கின்றன.

பல நேரங்களில் தோல்விப் படங்களாகவும் மாறியிருக்கின்றன. 'ப்ரேமலு' படத்தின் இந்தி ரீமேக் படம் 'ப்ரேம் கீட்டனு' என்கிற தலைப்பில் உருவாகியிருக்கிறது.

இந்த ரீமேக் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது.

Premalu
Premalu

'ப்ரேமலு' படத்தின் கதையிலிருந்து சில விஷயங்களை மாற்றியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதை ஹைதராபாத் பின்னணி, ஐடி பணிச்சூழல் என்பதாக நகரும்.

ஆனால், இந்த இந்தி ரீமேக்கான 'ப்ரேம் கீட்டனு' படத்தில், கதையைக் கல்லூரி பின்னணியில் அமைத்திருக்கிறார்கள். அத்தோடு காட்சிகளும் அதற்கேற்ப மாற்றப்பட்டதால், ரசிகர்கள் வருத்தமடைந்து பதிவிட்டு வருகிறார்கள்.

நஸ்லென் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் வீர் பஹாரியா நடிக்கிறார். இவர் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன். மமிதா பைஜூ கதாபாத்திரத்தில் நடிகை ஆசிஃபா சையத் நடிக்கிறார்.

இந்த இந்தி ரீமேக் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்திக்கு ரீமேக் வெர்ஷன் வருவதால், ஜியோ சினிமா தளத்திலிருந்து 'ப்ரேமலு' படத்தைத் தற்காலிகமாக நீக்கியிருக்கிறார்கள்.

நடிகை அனன்யா ராஜ் திடீர் மரணம்; ஒரு மாதம் கடந்து குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இந்தியத் திரைத்துறையில் தன் தனித்துவமான நடிப்பாலும் உழைப்பாலும் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 35-வது வயதில் காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியு... மேலும் பார்க்க

``பாலிவுட் திரையுலகம் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கிறது" - அனுராக் காஷ்யப் ஓப்பன் டாக்!

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்ய எந்த விஷயம் குறித்தும் உடைத்துப் பேசுவதற்கு தயங்காதவர். தொடர்ந்து இந்தித் திரையுலகில் நிலவும் அழுத்தங்கள் குறித்தும், அதிகாரத்தில் இருப்பவர்களுக... மேலும் பார்க்க

"உங்க வரம்புக்குள் இருங்க; என் உதவி தேவைப்படலாம்" - மனைவி சுனிதாவுக்கு நடிகர் கோவிந்தா எச்சரிக்கை

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு வேறு ஒரு டிவி நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி சுனிதா அஹுஜா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனை பொது இடங்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் சுனிதா தெரிவித்து வ... மேலும் பார்க்க

Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" - கணக்கு சொல்லும் யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. Ramayana Movieஇப்படத்தின் தயாரிப்பாளர் நம... மேலும் பார்க்க

குளிர்பானத்தில் மயக்க மருந்து; 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது இயக்குநர்

பாலிவுட் படங்களான 'படே தில் வாலா' (Bade Dil Wala) மற்றும் 'ஜோரு கா குலாம்' (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73). திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஷகீல் நூரானி மீது ... மேலும் பார்க்க

Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! - பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி

ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த 'ஸ்பாட்டிஃபை' தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 'டுயட்' என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த... மேலும் பார்க்க