செய்திகள் :

Ramayana: "அந்தச் சம்பவத்துக்காக மட்டுமே சூர்ப்பணகை நினைவுகூரப்படுகிறார்; ஆனா..."- ரகுல் ப்ரீத் சிங்

post image

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

இப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார்.

Ramayana Trailer - Yash
Ramayana Trailer - Yash

சமீபத்தில், எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் ரகுல் பிரீத் சிங்கிடம், "சூர்ப்பணகை போன்ற ஒரு கடினமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்குப் பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டு, இந்தச் சவாலான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்தவர், "நான் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணமே நீங்கள் குறிப்பிட்ட அந்தச் சிக்கலான தன்மைதான்.

வரலாற்றில் ஒரே ஒரு குறிப்பிட்ட சம்பவத்துக்காக மட்டுமே அவர் நினைவுகூரப்படுகிறார். ஆனால், அவருடைய கதைக்குப் பின்னால் அதைவிட நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

ஒரு நடிகையாக, மக்களின் பார்வையை மாற்றக்கூடிய மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதுதான் எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது.

Rakul Preet Singh|ரகுல் ப்ரீத்
Rakul Preet Singh|ரகுல் ப்ரீத்

'ராமாயணா' படம் திரைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் திறந்த மனதோடு இந்தச் சூர்ப்பணகை கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Gen Z: "இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்" - விமர்சனங்களுக்கு கங்கனா ரனாவத் பதில்

நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், சமீபத்தில் Gen z இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் ... மேலும் பார்க்க

Ramayana: "முழுமையான நேர்மையோடு அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது" - ராமாயணா இயக்குநர்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்திருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ரிலீஸாக வருகிறது. திட்டமிடல்களுடன் உலகமெங்கும் இப்படத்தை ரிலீஸ் செய்திடவும் படக்குழு... மேலும் பார்க்க

"நான் அசிங்கமான பெண் என்று கூறி பிரிந்து சென்றார்" - கணவரின் நினைவுகளைப் பகிர்ந்த நடிகை அபராமேத்தா

பாலிவுட் நடிகையும், டிவி நடிகையுமான அபரா மேத்தா பாலிவுட் நடிகர் தர்சன் ஜரிவாலா என்பவரை 1982ம் ஆண்டு திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் கட... மேலும் பார்க்க

"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" - சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பிரத்ய... மேலும் பார்க்க

நீட் போராட்டம்: "இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது; புறக்கணிக்கவும் கூடாது" - கரீனா கபூர்

டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கரீனா கபூரும் தனது ஆதரவைத் தெரிவித... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "மாணவர்களின் தைரியமான, துணிச்சலான செயல் இது"- சல்மான் கான் ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர்... மேலும் பார்க்க