செய்திகள் :

Ranbir Kapoor: "நடிப்பை விட்டு விலகுகிறேனா!?" - தெளிவுபடுத்திய ரன்பீர் கபூர்

post image

நடிகர் ரன்பீர் கபூர் நடித்த 'ராமாயணா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்திருக்கிறார்கள்.

Ramayana - Part 1
Ramayana - Part 1

சமீபத்தில் பிபிசி ஏசியன் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில், திரைப்படம் இயக்கும் ஆர்வம் குறித்தும், தனது நடிப்பு வாழ்க்கை குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் எனது முதல் திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்காகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பே திரைக்கதை எழுதத் தொடங்கிவிட்டேன்.

திரைக்கதை அமைப்பது என்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை இப்போதுதான் உணர்கிறேன். எனது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நான் நிச்சயமாக நடிக்க மாட்டேன்.

முற்றிலும் ஒரு இயக்குநராக மட்டுமே பணியாற்றுவேன்" என்றவர், "ஆண்டிற்கு 100 முதல் 125 நாட்கள் மட்டுமே நான் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்.

ரன்பீர் கபூர் - Ranbir Kapoor
ரன்பீர் கபூர் - Ranbir Kapoor

இதனால் கதைகள் எழுத எனக்குப் போதிய நேரம் கிடைக்கிறது. 'நடிப்பில் இது எனது கடைசிப் பத்தாண்டு' என்று நான் கூறியது, கதாநாயகனாக நான் நடிக்கும் முதன்மையான கதாபாத்திரங்களைக் குறித்தே தவிர, முற்றிலும் நடிப்பை நிறுத்துவது பற்றி அல்ல.

தற்போது கைவசம் உள்ள பெரிய படங்களை முடித்துவிட்டு இயக்குநர் நாற்காலியில் அமர ஆவலாக இருக்கிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

ராமாயணா: `சாய் பல்லவியின் சண்டை காட்சி' - முன்னாள் சீதை நடிகை தீபிகா சிக்லியா சொல்வது என்ன?

1987-ம் ஆண்டு வெளியான 'ராமாயணம்' தொலைக்காட்சித் தொடரில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மூத்த நடிகை தீபிகா சிக்லியா. ராமானந்த் சாகர் இந்தியில் இயக்கிய இத்தொடர் இன்றளவும் மக்களால் பெரிதும் ... மேலும் பார்க்க

கிங் படத்தில் காவி நிற உடையில் தீபிகா; "சனாதன தர்மத்தில் இதுபோல்.."- ஷாருக்கான் மீது பாஜக MLA புகார்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் நடிப்பில் கிங் படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் முதல் பாடலை ஷாருக்கான் தனது 61வது பிறந்தநாளில் வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தின் முதல் பாட... மேலும் பார்க்க

Ramayana - Part 1 Review: பாலிவுட்டின் ஃபேன்டஸி விருந்து - இந்தியாவின் பிரமாண்ட சினிமா சாதிக்கிறதா?

அசுரக் குலத்தை அடிமைகளாக நடத்தும் தேவர்கள், இலங்கையையும் பிடித்துக்கொள்ள, அங்கிருக்கும் ராணியின் (ஷோபனா) புதல்வன் ராவணன் (யஷ்) பிரம்மனை நோக்கி தவம் இருக்கிறான். மானுடனைத் தவிர எந்த வகையிலும் தனக்கு மர... மேலும் பார்க்க

"அங்கு மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டியிருந்ததும் எனக்குப் சவாலாக இருந்தது!" - ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்த 'அக்கா' வெப் சீரிஸ் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. இப்படத்திற்காக அளித்த புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் தனது திரைப்பயணத்தில் தனக்குப் பிடிக்காத ஒரு கதாபாத்... மேலும் பார்க்க

Ramayana: "அதனால் 'ராமாயணா 2' 2028-ம் ஆண்டுக்கு தள்ளிப் போகிறது!" - தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகிறது. Ramayana Trailer - Yashஇந்நிலையில், படத்தின் ... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகர் துஷார் கபூரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்; பிஷ்னோய் பெயரைப் பயன்படுத்திய கும்பல்

பாலிவுட் பட தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் சகோதரரும், நடிகருமான துஷார் கபூரை மர்ம நபர் ஒருவர் போன் மூலம் தொடர்பு கொண்டார். அந்த நபர் தான் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த ஹார்ரி பாக்ஸர் என்று அறிமுகப்... மேலும் பார்க்க