செய்திகள் :

Retardmaxxing: புத்திசாலிகள் தோற்கும் இடத்தில், `மக்கு' வேஷம் போட்டு ஜெயிப்பது எப்படி? - Gen Z Term

post image

இணையவாசிகளின் (குறிப்பாக Gen Z) அகராதியில் தினமும் புதுப்புது வார்த்தைகள் முளைக்கின்றன. Looksmaxxing (அழகை மெருகேற்றுவது), Mewing (தாடையை சீர் செய்வது) வரிசையில் இப்போது லேட்டஸ்ட் வரவுதான் இந்த Retardmaxxing.

Retard: இது அறிவுசார் குறைபாடு உள்ளவர்களைக் குறிக்கும் ஒரு தவறான மற்றும் புண்படுத்தக்கூடிய ஆங்கிலச் சொல். (குறிப்பு: இணையத்தில் இச்சொல் அதன் மருத்துவ அர்த்தத்தில் அல்லாமல், 'முட்டாள்தனமாக' அல்லது 'அறிவற்றது போல்' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது).

Maxxing: இது Looksmaxxing போன்ற இணையச் சொற்களிலிருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட பண்பை அல்லது செயலை அதன் உச்சகட்டத்திற்கு (Maximum) கொண்டு செல்வதைக் குறிக்கிறது.

AI image
AI image

அதாவது, அதிகமாகச் சிந்திப்பதை (Overthinking) குறைத்து, எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், முட்டாள்தனமாகத் தெரிந்தாலும் பரவாயில்லை என்று தன்னிச்சையாகச் செயல்படுவதே இவர்களின் நோக்கம். கேட்கவே விவகாரமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? இதன் அர்த்தம் சிம்பிள்: `தெரிந்தே முட்டாளாக நடிப்பது' அல்லது `மூளையைக் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு நிம்மதியாக வாழ்வது.’

உலகம் முழுதும் `நீ புத்திசாலியாக இரு, IQ-வை வளர்த்துக்கொள்’ என்று சொல்லிக்கொண்டிருக்க, இந்தக் கூட்டமோ, "ஐயா சாமி! புத்திசாலியாக இருந்தால் நிறைய வேலை வாங்குகிறார்கள். அதனால் நான் மக்கு மண்ணாங்கட்டியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று முடிவெடுத்துவிட்டது. இதைத்தான் ஆங்கிலத்தில் Weaponized Incompetence (இயலாமையை ஆயுதமாக்குதல்) என்று கூறுவார்கள்.

இந்தக் கோட்பாடு எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள, நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களைப் பார்ப்போம்:

1. உங்கள் ஆபிஸில், "சார், எனக்கு எக்ஸெல் அத்துப்படி!" என்று சொன்னால் என்ன நடக்கும்? உங்களுக்கு 10 எக்ஸ்ட்ரா ஃபைல்களைத் தூக்கித் தலையில் வைப்பார்கள். அதே சமயம், "சார்... எக்ஸெல் ஓப்பன் பண்ண டபுள் கிளிக் பண்ணனுமா? இல்ல மானிட்டரை திருப்பணுமா?" என்று கேட்டுப் பாருங்கள். "போடா லூசுப் பயலே... நானே பண்ணிக்கிறேன்" என்று உங்கள் பக்கமே வரமாட்டார்கள்.

AI image
AI image

2. தற்போது ரீல்ஸ்களில் சிலர் விசித்திரமான ஒலிகளை எழுப்புவது, பொது இடங்களில் சம்பந்தமே இல்லாமல் கத்துவது அல்லது அர்த்தமற்ற செயல்களைச் செய்வது போன்ற வீடியோக்களைப் பகிர்வது. ஒரு நபர் கேமராவைப் பார்த்துக்கொண்டு, எந்தத் தர்க்கமும் இல்லாமல் பைத்தியக்காரத்தனமாகப் பேசுவார். இது பார்ப்பதற்கு Cringe ஆக இருந்தாலும், அவர்களுக்குப் பார்வையாளர்கள் கிடைப்பார்கள். புத்திசாலித்தனமாகப் பேசுவதை விட, இப்படி வினோதமாகச் செய்வது.

3. நண்பர்கள் குழுவிலோ அல்லது வீட்டிலோ ஒரு சிக்கலான பிரச்சனை வரும்போது, அதைப் புரிந்துகொள்ளும் திறன் இருந்தும், "எனக்கு இதெல்லாம் புரியலப்பா, நான் சின்னப் பையன்" என்பது போல் பாவனை செய்து ஒதுங்கிக் கொள்வது.

இதுதான் Retardmaxxing-ன் அடிப்படை தத்துவம்!

இது ஏன் தற்போது ட்ரெண்ட் ஆகிறது?

இன்றைய உலகம் `எப்போதும் புத்திசாலியாக இரு, எப்போதும் உழைத்துக்கொண்டே இரு’ என்று அழுத்தம் கொடுக்கிறது. இந்த அழுத்தத்தைத் தாங்க முடியாத சிலர், "நான் ஏன் புத்திசாலியாக இருக்க வேண்டும்? நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்ற முடிவுக்கு வருகிறார்கள். இது ஒரு வகை மன அமைதிக்கான தப்பித்தல் (Escapism).

நீங்கள் புத்திசாலி என்று பெயர் எடுத்துவிட்டால், சமூகம் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கும். ஆனால், நீங்கள் ஒரு முட்டாள் (Retard) என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டால், யாரும் உங்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கவே சிலர் இந்த மனநிலையைக் கையில் எடுக்கிறார்கள்.

AI image
AI image

இது நல்லதா? கெட்டதா?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதை ஒரு தற்காப்பு கலையாகவே பார்க்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புகளிலிருந்து தப்பிக்கவும், மன அமைதியைத் தேடவும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கையில் எடுத்திருக்கும் ஒரு விசித்திரமான ஆயுதம் இது. உலகம் Smart ஆக மாறிக்கொண்டிருக்கும் போது, இந்த இளசுகள் மட்டும் `நான் ஒரு டியூப்லைட்!’ என்று விரும்பி மாறுவதுதான் காலத்தின் மிகப்பெரிய நகைச்சுவை முரண்.

இதில் பயன்படுத்தப்படும் Retard என்கிற வார்த்தை ஒரு மாற்றுத்திறனாளி சமூகத்தை இழிவுபடுத்துவது போல் இருப்பதாகப் பலரிடமிருந்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. இருப்பினும், இணையவாசிகள் இதை நகைச்சுவையான டோனிலேயே பயன்படுத்துகிறார்கள்.

இணையத்தில் இது ஜாலியாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் (வேலையிலோ, படிப்பிலோ) தொடர்ந்து இப்படி Retardmaxxing செய்வது, உங்கள் நற்பெயரையும், வளர்ச்சியையும் நிரந்தரமாகப் பாதித்துவிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரே நதி... ஐந்து நிறங்கள்; நகரும் ஓவியம்; - கொலம்பியாவின் இந்த மாயாஜாலத்தை நம்புவீர்களா?

நகரும் ஓவியம்கொலம்பியாவின் அடர்ந்த காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் கானோ கிரிஸ்டலேஸ் (Caño Cristales), சாதாரண கண்களுக்கு ஒரு நதியாகத் தெரியாது; அது ஒரு நகரும் ஓவியம்.இந்த நதி ஆண்டு முழுவதும் வண்ணமயமாக இர... மேலும் பார்க்க

`இரவில் படுக்கச்சென்ற இளம்பெண் இச்சாதாரி பாம்பாக மாறினாரா?' - பாம்பு தோல், வளையலை விட்டுவிட்டு மாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள சிகன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரீனா(20). இப்பெண் இரவில் தனது படுக்கைக்கு படுக்க சென்றார். ஆனால் காலையில் அவரது படுக்கைக்கு சென்றபோது அவரை காணவில்லை... மேலும் பார்க்க

பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த சீனர்! - இது நமக்கு சாத்தியமா?

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஹுயிஜோ நகரை சேர்ந்தவர் கியாவோ (Qiao). இவர் பயன்படுத்தாத சிம் கார்டுகளில் இருந்து சுமார் 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்துள்ளதாக கூறி வெளியிட்ட வீடியோ சமீபத்தில் சமூக... மேலும் பார்க்க

சல்மான் கான், ரன்பீர் கபூர், அக்‌ஷய் குமார்... ஆர்.எஸ்.எஸ்.மாநாட்டில் அணிவகுத்த பாலிவுட் பிரபலங்கள்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டு நாள் மாநாடு மும்பையில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டதன் 100வது ஆண்டை குறிக்கும் வகையில் நடந்த இம்மாநாடு ஆர்.எஸ்.எஸ்.மாநாடு போன்று அல்லாமல் சினிமா மாநாடு போன்... மேலும் பார்க்க

ட்ரோன் பிராண்டிங்: விளம்பர உலகில் புதிய சகாப்தம் - தமிழகத்தில் அறிமுகம் செய்த அலோக் இன்ஃபோடெக்

360° கோணத்தில் முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான அலோக் இன்ஃபோடெக், தமிழகத்தின் முதல் ட்ரோன் பிராண்டிங் சேவையை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதுமையான... மேலும் பார்க்க