செய்திகள் :

"Right Party, Wrong Leader"- அதிமுகவில் இருந்து விலகியது குறித்து வைகைச்செல்வன் விளக்கம்

post image

அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன் முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்திருக்கிறார்.

தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய வைகைச்செல்வன், "ஒரு உப்பை போல சுத்தமான தலைவராக இருப்பதை நான் பார்த்தேன். வியந்துபோனேன். மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஊழல், லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு ஆட்சி பீடுநடை போடுவதை எண்ணிப்பார்க்கையிலே மனமகிழ்ச்சியை தருகிறது. அதிமுகவில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்து கொண்டிருந்தால் இபிஎஸ் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும். இபிஎஸ் குறித்து குறை சொல்ல எனக்கு விருப்பமில்லை. Right Party, Wrong Leader.

எம்ஜிஆர் போன்று காலத்தின் கட்டாயம் விஜய், தமிழ்நாட்டின் தகுதியுள்ள தலைவராக விஜய் இருக்கிறார். தமிழ்நாட்டின் தகுதியுள்ள தலைவராக விஜய் உயர்ந்திருப்பதால் அவரை தேடி வந்து இணைந்திருக்கிறோம்.

அதிமுகவில் இருந்து மனவேதனையுடன் பிரிந்து வந்துள்ளோம். விஜய் எங்களிடம் எளிமையாக, அன்பாக, பாசமாக பேசினார்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

அதிமுகவில் சரியான தலைமை இல்லாத நிலையில் அங்கிருந்து பிரிந்து வந்து தவெகவில் இணைந்திருக்கிறோம், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக விஜய் உருவெடுத்திருக்கிறார்" என்று பேசியிருக்கிறார்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க